பிரித்தானியாவின் மிக மோசமான குடும்பம் இவர்கள்தான்!

Report Print Raju Raju in பிரித்தானியா

வீட்டு குளியலறையை குப்பை தொட்டியாகவும், கழிவறையாகவும் எட்டு வருடங்களாக பயன் பயன்படுத்தி அண்டை வீட்டு மனிதர்களை கஷ்டபடுத்தியது மட்டுமில்லாமல் ஒரு இளம் சிறுமிக்கு பாலியல் தொல்லையும் கொடுத்த ஒரு குடும்பத்தின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பிரித்தானியா நாட்டை சேர்ந்தவர் டேவிட் பிளைஸ் (49) இவர் தனது இரண்டு மகன்களான லீ (24) ராஸ் (18) உடன் ஒரு வீட்டில் வசித்து வந்தார்.

அவர்கள் தங்கள் வீட்டை எல்லா மனிதர்களை போல பராமரிக்கவில்லை. குளிக்கும் தொட்டியில் கழிவு குப்பைகளை போட்டு வைப்பது, வெஸ்டன் டாய்லேட்டை குப்பை மேடாக மாற்றி வைத்தது, மற்றும் வீட்டு தரை முழுவதும் கெட்டுபோன உணவுகளையும்,குப்பைகளையும் போட்டு ஒரு அருவருத்தக்க சூழலில் வாழ்ந்துள்ளனர்.

இப்படி இந்த மூவரும் எட்டு வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் அவர்கள் வீட்டுக்கு அருகில் வசித்தவர்கள் பட்ட கஷ்டங்கள் ஏராளமாகும்.

இது பற்றி அவர்கள் பக்கத்து வீட்டுகாரர் ஒருவர் கூறுகையில், நாங்கள் கடந்த எட்டு வருடமாக நரகத்தில் இருப்பது போன்று உணர்ந்தோம். துர்நாற்றம் அதிக அளவில் வீசியதால் அவதிபட்டோம் என கூறியுள்ளார்.

மேலும் ராஸ் என்னும் அந்த இளைஞன் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் இரண்டு வருடம் சிறை தண்டணையை தற்போது அனுபவித்து வருகிறான்.

அந்த வீட்டின் ஆசாத்திய நிலை தற்போது பொலிசாருக்கு தெரிய வர நீதிமன்றம் உத்தரவு படி அந்த வீடு உபயோகபடுத்த முடியாத என்பதால் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments