பிரித்தானியா வெளியேறியதால் பாதிக்கப்பட்ட பாலியல் தொழிலாளிகள்: ஒரு நாளைக்கு தொகை எவ்வளவு தெரியுமா?

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகிய பின்னர் லண்டனை சேர்ந்த பாலியல் தொழிலாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

Changing Lives’ Girls Are Proud (GAP) என்ற திட்டத்தின் கீழ் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் வடக்கு லண்டனில் உள்ள Durham மற்றும் Darlington ஆகிய நகர்களை சேர்ந்த பாலியல் தொழிலாளிகள், தங்களது அன்றாட வாழ்வின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காகவும், தாங்கள் வசிப்பதற்கு ஒரு இடம் தேவை என்பதற்காகவும் இந்த தொழிலை செய்து வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

ஒட்டுமொத்த லண்டனுடன் ஒப்பிடுகையில், Durham மற்றும் Darlington ஆகிய நகரங்களில் மட்டும் 200 பாலியல் தொழிலாளிகள் உள்ளனர், ஆனால் இந்த எண்ணிக்கையானது மிகவும் அதிகம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகிய பின்னர், வடக்கு லண்டனை சேர்ந்த சுமார் 1,000 பாலியல் தொழிலாளிகளுக்க குறைந்த அளவிலேயே வருமானம் கிடைத்துள்ளது.

இதில் சில பெண்கள் போதை மருந்து மற்றும் ஆல்கஹாலுக்கு அடிமையாகி இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர், இன்னும் பல பெண்கள் வசிப்பதற்கு இருப்பிடம் தேடி இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர் என தெரியவந்துள்ளது.

பாலியல் தொழிலாளி ஒருவர் கூறியதாவது, நாள் முழுவதும் இந்த தொழிலில் ஈடுபட்டதற்கு வெறும் 10 பவுண்ட்ஸ் மட்டுமே எனக்கு கிடைத்தது. ஆனால் எனக்கு தேவைகள் இருந்ததால் இந்த தொகையை நான் வாங்கிகொண்டேன்.

வாடிக்கையாளர்களின் பாலியல் முறைகேடுகள் அதிகரிக்கும்பட்சத்தில், அவர்கள் செல்வதற்கு வேறு இடம் எதுவும் இல்லை. எதுவாக இருந்தாலும் பிரித்தானியா நாட்டிற்குள் தான் சமாளித்துக்கொள்ள வேண்டும்.

வெளியில் ஒன்றும் இல்லை. உங்களால் எங்கு செல்ல முடியும்? என கேட்டுள்ளார்.

இந்த ஆய்வினை நடத்திய Chief Executive Stephen Bell கூறியதாவது, நம்மிடம் எல்லாம் இருக்கிறது, ஆனால் நாம் அனைவரும் குளத்திற்குள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நமக்குள் மறைத்துவைத்துக்கொண்டோம். கற்கள் மற்றும் பாறைகளுக்கு அடியில் இருப்பது போன்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

வசிப்பிடத்தை தேடி இதுபோன்ற ஒரு தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு குறைந்த அளவு தொகை கொடுப்பதால் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பாலியல் தொழிலாளிகள் தங்களுக்கு நடக்கும் முறைகேடுகள் பற்றி பொலிசாரிடம் புகார் தெரிவிக்கவும் முன்வரவில்லை.

இதற்கு காரணம், இத்தொழிலாளிகளை பொலிசார் நடத்தும்விதம் மிகவும் மோசமானதாக இருக்கும். இவை அனைத்தையும் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.

சமுதாயத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள், வன்முறைகள் ஆகியவற்றை கண்கூடாக பார்த்து வளர வேண்டிய சூழ்நிலைக்கு பெண்கள் மட்டுமல்ல ஏராளமான இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.

தற்போது நடத்தப்பட்ட இந்த ஆய்வு ஒரு எச்சரிக்கை மட்டுமே. இதனை ஒரு துருப்பாக எடுத்துக்கொண்டு அனைத்தையும் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments