லண்டன்வாசிகளுக்கு பொலிசார் எச்சரிக்கை! தீவிரவாத தாக்குதல்?...வெடிகுண்டு கண்டெடுப்பு!

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் ரயிலின் உள்ளே வெடிகுண்டு வைத்து விட்டு தப்பி ஓட முயன்ற இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

வடக்கு லண்டனில் உள்ள Holloway எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக இயங்கும்.

அங்கு ரயில் ஒன்றில் வித்தியாசமான பொருள் இருப்பதை பார்த்த பயணி ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

விரைந்து வந்த அதிகாரிகள் சோதனை செய்து பார்த்த போது, வெடிகுண்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில் சந்தேகப்படும்படி சுற்றி திரிந்த 19 வயது நபரை பொலிசார் கைது செய்தனர்.

இதுபற்றி பொலிசார் கூறுகையில், அந்த இளைஞன் யார் சொல்லி இந்த வெடிகுண்டை வைத்தான் என தெரியவில்லை.

இது போல வேறு இடத்தில் அசம்பாவித செயலில் யாராவது ஈடுபட்டு இருக்கிறார்களா என சோதனையில் ஈடுபட்டு வருகிறோம் மற்றும் அந்த இளைஞனிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அதன் பின்னரே முழு விவரம் தெரியவரும் என கூறியுள்ளார்.

மேலும் அங்குள்ள CCTV கமெரா மூலமும் ஆய்வுகள் நடப்பதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இதனிடையில் அந்த ரயில் நிலையத்தில் உள்ள மக்கள் அனைவரும் வெளியேற்றபட்டு அந்த ரயில் நிலையமானது முழுவதும் பொலிசார் கட்டுப்பாடு வளையத்துக்குள் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments