விமானத்தை தவற விட்ட பயணி: விமான நிலையத்திலேயே கொல்லப்பட்ட பயங்கரம்

Report Print Peterson Peterson in பிரித்தானியா

பிரித்தானிய நாட்டை சேர்ந்த பயணி ஒருவர் விமான நிலையத்திற்கு அருகில் நிர்வாண நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஸ்டீவன் ஆல்போர்ட்(51) என்பவர் சில தினங்களுக்கு முன்னர் ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை 9 மணியளவில் Malaga விமான நிலையத்தில் இருந்து பொலிசாருக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதில், ‘விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஓர் இருக்கையில் நிர்வாண நிலையில் கைகள் கட்டப்பட்டு ஒரு சடலம் கிடப்பதாக’ தெரிவிக்கப்பட்டது.

தகவல் பெற்று அங்கு விரைந்து சென்று விசாரணை செய்ததில், சடலமாக கிடந்தவர் ஸ்டீவன் ஆல்போர்ட் என தெரியவந்தது.

மேலும், அவருக்கு அருகில் கிடந்த பெட்டியை ஆய்வு செய்தபோது, அவர் அன்றைய திகதியில் தாய்நாட்டிற்கு திரும்ப பயணச்சீட்டு இருந்துள்ளது.

இதுமட்டுமில்லாமல், கூடுதலாக கிடைத்த ஆதாரங்களில் அவர் விமானத்தை தவற விட்டிருக்கலாம் என்றும், அவரை பாலியல் சித்ரவதை செய்து மர்ம நபர்கள் கொலை செய்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

எனினும், பிரேத பரிசோதனைக்கு பிறகு உறுதியான தகவல் வெளியாகும் என்பதால் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments