நடுவானில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

Report Print Arbin Arbin in பிரித்தானியா
539Shares
539Shares
ibctamil.com

பிரித்தானியாவில் பறக்கும் விமானத்தில் இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை தந்த இந்திய வம்சாவளி நபருக்கு 20 வாரங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கத்தார் நாட்டில் இருந்து பிரித்தானியாவின் மான்செஸ்டர் செல்லும் வழியில், விமானத்தில் தமது இருக்கை அருகே அமர்ந்து பயணம் செய்த 18 வயது இளம்பெண்ணிற்கு இந்த கொடுமை இழைக்கப்பட்டுள்ளது.

கைதான நபர் 46 வயதான சுமன் தாஸ் என தெரிய வந்துள்ளது. தோஹாவில் இருந்து மான்செஸ்டர் வரும் வரையில் விமானத்தில் தம்மை பாலியல் ரீதியாக தொல்லைக்கு ஆளாக்கியதாக பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் குறித்த நபர் குற்றம் செய்துள்ளது நிரூபணமான நிலையில் அவருக்கு மான்செஸ்டர் நீதிமன்றம் 20 வாரங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தியாவில் பிறந்து வளர்ந்தவரும் கத்தாரில் தொழில் செய்து வருபவருமான குறித்த நபர் பிரித்தானியா குடிமகன் இல்லை என்பதால் அவருக்கு சமூக சேவை செய்யும் பொருட்டு உத்தரவிட முடியாது எனவும் நீதிமன்றம் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

மட்டுமின்றி குறித்த நபரின் நடத்தையை கண்காணிக்கும் பொருட்டு தண்டனை காலம் முடிந்த பின்னரும் பிரித்தானியாவில் அவர் தங்கியிருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தின் போது, அந்த நபர் தூக்கம் நடித்துக்கொண்டே துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார். பல முறை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணால் மறுப்பு தெரிவித்துள்ள போதும் அவர் அதை சட்டை செய்யாமல் பாலியல் தொல்லை அளிப்பதை தொடர்ந்துள்ளார்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் நடந்தேறும்போது குறித்த நபரின் மனைவி இவரது அருகாமையில் தூக்கத்தில் இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த நபரின் தொல்லை அத்துமீறியதும் குறித்த இளம்பெண் இருக்கையை விட்டு எழுந்து அழுதுகொண்டே நடந்தவற்றை விமான பணிப்பெண் ஒருவருடன் பகிர்ந்துள்ளார்.

ஆனால் இச்சம்பவங்கள் அனைத்தும் தன்னை அறியாமல் நடந்தவை என்றும் திட்டமிட்டே தாம் இதை செய்யவில்லை என்றும் அவர் நீதிமறத்தில் அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

46 வயதான சுமன் தாஸ் தமது மனைவியுடன் விடுமுறையை கழிக்கும் பொருட்டு பிரித்தானியா வந்துள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் தாய்லாந்தில் விடுமுறையை கழித்துவிட்டு பிரித்தானியா திரும்பியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments