பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படும் 1300 பேர்?

Report Print Raju Raju in பிரித்தானியா

குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அவர்கள் செய்த குற்றங்களின் தன்மையை பொறுத்து தண்டனைகள் வழங்கப்படுகிறது.

கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடும் நபர்களை நாடுகடத்துவதும் வழமையான ஒன்று தான்.

ஆனால் 1300க்கும் மேற்பட்ட நபர்கள் தங்கள் குடும்பத்தினரை காரணம் காட்டி பிரித்தானியாவிலேயே தங்கி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது, 2006/07 ஆண்டு போடப்பட்ட 356 ஆம் பிரிவு சட்டத்தின் படி குற்றவாளிகளின் குடும்பங்கள் பிரித்தானியாவில் இருந்தால் மனித உரிமை அடிப்படையில் குற்றவாளிகள் தங்கள் குடும்பத்தை விட்டு பிரியாமல் இருக்க நாடு கடத்தப்படமாட்டர்கள்.

இதனை உபயோகபடுத்தி பல குற்றவாளிகள் இதில் இருந்து தப்பித்து விடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது.

கொடூர குற்றசெயல்களில் ஈடுபடுபவர்கள் எப்படி பிரித்தானியாவிலேயே இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற கேள்வி எல்லோரிடமும் எழவே செய்கிறது.

ஆனால் சில குற்றவாளிகள் இதில் தப்பிப்பதில்லை உதாரணத்துக்கு, சோமாலியா நாட்டை சேர்ந்த முஸ்தபா என்னும் நபர் கர்ப்பிணி பெண்ணை கத்தி முனையில் மிரட்டி கற்பழித்ததாக அவருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கபட்டது. அவர் இந்த சட்டதை உபயோகப்படுத்தி பிரித்தானியாவில் தங்க முயற்சிக்கஈ ஆனால் நீதிமன்றம் அதற்கு ஒத்து கொள்ளவில்லை.

இது குறித்து அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் கூறுகையில், வேறு நாட்டிலிருந்து இங்கு வந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர் நாடு கடத்தபடுவது தான் சரியாக இருக்கும்.

ஆனால் அவர்கள் மனித உரிமை சட்டத்தை வைத்து தப்பிக்க முயல்கிறார்கள். ஐரோப்பியாவின் சட்டத்தை இங்கு திணிக்க பார்ப்பது சரியல்ல என்றும் இதற்கு நிரந்தர தீர்வு விரைவில் காணப்படும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments