உட்கார மறுத்த நாய்க்கு நேர்ந்த கதி! வேதனைமிக்க வீடியோ

Report Print Basu in பிரித்தானியா
428Shares

பிரித்தானியாவில் இளம் பெண் ஒருவர் தனது நாயை ஷூவால் மிருகத்தனமாக தாக்கிய சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரேட்டர் மான்செஸ்டர், ஓல்ட்ஹாமில் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.

குறித்த வீட்டில் 20 வயது Carl Gough என்ற பெண் வீட்டின் உரிமையாளர் பெண்ணுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டு உரிமையாளர் பெண் தனது நாயை ஷூவால் சரிமாரியாக தாக்கியுள்ளார்.

நாய் கத்தும் சத்தம் கேட்ட Carl Gough அவரிடம் எதற்காக இப்படிக் அடிக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.

இதற்கு அந்த பெண், நாய் உட்கார மறுக்கிறது என காரணம் கூறியுள்ளார். பின்னர், Carl Gough குறித்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து நாயை தாக்குவதை தடுத்துள்ளார். கோபமடைந்து உரிமையாளர் அவரை வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளார்.

உடனே, Carl Gough விலங்குள் வதைத் தடுப்பு அமைப்பிற்கும், பொலிசாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பொலிசார் கூறியதாவது, நாய்க்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் எதுவும் செய்ய முடியவில்லை. எனினும், வீடியோ மிகவும் பயமாகவும் கொடூரமாகவும் உள்ளது என தெரிவித்துள்ளனர்.

தற்போது, உரிமையாளரிடமிருந்து மீட்கப்பட்டுள்ள Lennox என்னும் நாய் விலங்குகள் வதைத் தடுப்பு அமைப்பிடம் பாதுகாப்பாக உள்ளது.

எனினும், இச்சம்பவத்தில் வீட்டின் உரிமையாளருக்கு எதிராக நாயை காப்பாற்ற போராடிய Carl Gough தற்போது வீடின்றி நடுத் தெருவில் உள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments