நேரலையில் பிரபல ஊடக நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு பிரசவ வலி: ஹீரோவாக மாறிய தோழி

Report Print Santhan in பிரித்தானியா

பிரபல பிபிசி நிகழ்ச்சி தொகுப்பாளரான விக்டோரியா பிரிட்ஜ் நேரலையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த போது பிரசவ வலி ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்தவர் Victoria Fritz. இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான பிபிசியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிப்புரிந்து வருகிறார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு யூலை மாதம் Dan என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பிபிசி தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கும் BBC Breakfast என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இவர் நேரலையில் தரும் பல தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், இவருக்கேன்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவருடைய பேச்சுத்திறனைக் கண்டு பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை வழக்கம் போல் BBC Breakfast நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த போது திடீரென்று இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதையும் பொருட்படுத்தாமல் நிகழ்ச்சியை சிறப்பாக முடித்துள்ளார்.

நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களிலேயே வலி அதிகமாகி பனிக்குடம் உடைந்துள்ளது. இதை அறிந்த சக ஊழியர்கள் சிலர் அவரை உடனடியாக அருகில் உள்ள மான்செஸ்டர் பகுதியின் St Mary's Hospital அனுமதித்துள்ளனர்.

இவருடைய கணவருக்கு தகவல் அறிவித்தும் அவர் வர தாமதமானதால், Victoria Fritzன் தோழியும் சக தொகுப்பாளருமான Sally Nugent அருகில் இருந்து அனைத்து உதவிகளையும் செய்துள்ளார். அதன் பின்னர் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மேலும் Victoria Fritz வரும் டிசம்பர் மாதம் தான் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments