7 பேரின் உயிரை பறித்த ட்ராம் விபத்து! ஓட்டுநர் தான் காரணம்- அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியானது

Report Print Raju Raju in பிரித்தானியா

ஐம்பதுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த டிராம் வாகனத்தின் ஓட்டுனர் பயணத்தின் போது தூங்கியதால் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் ஓட்டுனர் தூங்கும் காட்சி வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியா நாட்டின் தெற்கு லண்டனில் மக்கள் பயணிக்கும் டிராம் வாகனத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

அதில், டிராம் வாகனம் மிக வேகமாக சென்று கொண்டிருப்பது போலவும் அதை இயக்கும் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கொண்டு அயர்ந்து தூங்குவது வரை அந்த வீடியோவில் உள்ளது.

அதன் பிறகு நடந்ததெல்லாம் நெஞ்சை பதைபதக்கும் விடயமாகும். அதாவது அந்த ஓட்டுனர் தூங்கியதால் அந்த டிராம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒருவர் கூறுகையில், அந்த டிராமானது 40 மைல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது அதன் ஓட்டுனர் தூங்கிகொண்டிருந்தார், அவர் தான் இந்த விபத்துக்கு காரணம் மேலும் அவர் தூங்கும் காட்சியை பயணி ஒருவர் தான் வீடியோவாக பதிவு செய்துள்ளார் என அவர் கூறியுள்ளார்.

இது கூறித்து பொலிசார் கூறுகையில், இதில் காயமடைந்தவர்களில் எட்டு பேரின் உடல் நிலை மிகவும் மோசாமாக உள்ளது.

இந்த விபத்துக்கு காரணமான டிராம் ஒட்டுனர் Alfred Dorrisஐ (42) கைது செய்துள்ளோம். மேலும் இது விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments