கிறிஸ்துமஸ் தினத்தில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த குட்டி இளவரசர்: என்ன செய்தார் தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் William மற்றும் இளவரசி Kate ஆகியோர் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடுவதற்காக வழக்கமாக தாங்கள் கொண்டாடும் St Mary Magdalene ஆலயத்திற்கு செல்லாமல், Berkshire பகுதியின் Englefield ல் உள்ள St Mark's என்ற தேவாலயத்திற்கு தங்கள் குழந்தைகளான குட்டி இளவரசர் George மற்றும் குட்டி இளவரசி Charlotte உடன் சென்றுள்ளனர்.

இந்த தேவாலயம் இளவரசரின் Sandringham பகுதியில் இருந்து சுமார் 270 கி,மீற்றர் தொலைவில் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் குட்டி இளவரசர் George அணிந்து வந்த உடை தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதில் அவர் அணிந்திருந்த சிமெண்ட் நிற உடை அவருக்கேன்று செதுக்கி வைத்தது போல் இருந்தது.

குட்டி இளவரசி Charlotte சிவப்பு நிற உடை அணிந்து அதன் மேல் கருநீலம் கலந்த கோட் அணிந்திருந்தது அனைவரையும் கவர்ந்துள்ளது.

இளவரசர் William மற்றும் Kate பாரம்பரிய உடை அணிந்து வந்தனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments