நாட்டை விட்டு வெளியேறுங்கள்! 24 ஆண்டுகளாக பிரித்தானியாவில் வசித்தவருக்கு பேரதிர்ச்சி

Report Print Fathima Fathima in பிரித்தானியா

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த Monique Hawkins என்ற பெண் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் பிரித்தானியாவில் வசித்து வருகிறார்.

24 ஆண்டுகளாக பிரித்தானியாவில் வசித்து வரும் Monique Hawkins, நாட்டை விட்டு வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு உள்துறை அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகுவதாக முடிவு செய்துள்ளதை தொடர்ந்து, அங்கு வசிக்கும் வெளிநாட்டவர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.

பிரித்தானியா விலகுவது தனக்கு பேரிடியாக விழுந்தது என கூறும் Monique Hawkins, நிரந்தர குடியுரிமை பெற முடிவு செய்து விண்ணப்பித்துள்ளார்.

ஆனால் Monique Hawkins மற்றும் அவரது இரு குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது என நிராகரித்துள்ள உள்துறை அலுவலக அதிகாரிகள், நாட்டை விட்டு வெளியேறுங்கள் என கூறியுள்ளனர், நெதர்லாந்து கடவுச்சீட்டை சமர்பிக்காததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

தன்னுடைய தாய் நெதர்லாந்தில் இருப்பதாகவும், அவரை பார்ப்பதற்காக செல்லும் போது தனக்கு கடவுச்சீட்டு தேவைப்படும் எனவும் Monique Hawkins கூறியுள்ளார்.

இதனையடுத்து வழக்கறிஞர் ஒப்புதலுடன் கூடிய பாஸ்போர்ட் பிரதியை இணைத்துள்ளதாகவும், அதற்காக காரணத்தையும் தெளிவாக விளக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments