13 ஆண்டுகளாக கற்பழிக்கப்பட்ட இளம்பெண்: சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட பரிதாபம்

Report Print Peterson Peterson in பிரித்தானியா

பிரித்தானிய நாட்டில் இளம்பெண் ஒருவர் சிறு வயது முதல் தொடர்ந்து 13 ஆண்டுகளாக கொடூர்மாக கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியா நாட்டை சேர்ந்த அன்னா ரஷ்டின்(28, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண்ணிற்கு ஆதரவு யாரும் இல்லாததால் சிறு வயது முதலே வீடில்லாமல் ஏழ்மையில் வசித்து வந்துள்ளார்.

இவருக்கு 13 வயதாக இருந்தபோது ஆசியா நாட்டை சேர்ந்த டாக்ஸி ஓட்டுனர் ஒருவர் அடைக்கலம் தருகிறேன் எனக் கூறி அவரை அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், வீட்டிற்குள் பூட்டி ஒவ்வொரு நாளும் கற்பழித்து வந்துள்ளார். இதுமட்டுமில்லாமல், இவரை விபச்சார தொழிலில் ஈடுப்படுத்தி கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

சில வருடங்களுக்கு பிறகு அன்னாவிற்கு 4 குழந்தைகள் பிறந்தது. ஆனால், இந்த 4 குழந்தைகளையும் அந்த டாக்ஸி ஓட்டுனர் பணத்திற்காக விற்பனை செய்துள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து 13 ஆண்டுகளாக கற்பழிப்பு, சித்ரவதைக்கு உள்ளான அப்பெண் சில மாதங்களுக்கு முன்னர் அங்கிருந்து தப்பி வெளியேறியுள்ளார்.

தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை ’Secret Slave’(ரகசிய அடிமை) என்ற பெயரில் ஒரு புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.

இப்புத்தகத்தில் ‘இதுபோன்ற கொடுமைகளால் தற்போது சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், பிரித்தானிய நாட்டில் பல பகுதிகளில் இதுபோன்ற கொடுமைகள் நிகழ்ந்து வருவதால் அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இப்பத்தகத்தை வெளியிடுவதாக’ அன்னா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments