பிரித்தானியா புத்தாண்டு கொண்டாட்டம்: மக்கள் மீது லொறி மோத தீவிரவாதிகள் திட்டம்?

Report Print Basu in பிரித்தானியா

ஐரோப்பாவில் விழா காலங்களில் தீவிரவாதிகள் மக்கள் கூட்டத்தில் லொறி மோதி தாக்குதல் நடத்தி வருவதால், பிரித்தானியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான பாதுகாப்பு திட்டங்கள் சரிப்படுத்தப்பட்டுள்ளது.

புத்தாண்டு இரவு லண்டனில் மேயர் வாணவேடிக்கை காட்சியை காண ஆயிரக்கணக்கான மக்கள் வருவதால் சுமார் 3,000 ஆயுதமேந்திய பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெருநகர பொலிஸ் டிடக்டிவ் கண்காணிப்பாளர் Phil Langworthy, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மக்களின் பாதுகாப்பிற்காக அதிகபடியான மற்றும் இரகசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக உத்தரவாதம் அளித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, நைஸ், பெர்லின் தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு திட்டம் சரிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறும் புத்தாண்டு உட்பட 3,500 நிகழ்வுகளை சுற்றி பொலிஸ் உன்னிப்பாக பாதுகாப்பு அளித்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன்னே உன்னிப்பாக பாதுகாப்பிற்கான திட்டம் வகுத்து வருகின்றோம். இதுவரை எந்த புலனாய்வு துறையும் புத்தாண்டில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக குறிப்பிடவில்லை.

ஆனால், மக்கள் கொண்டாட்டத்தின் போது சந்தேகத்திறகுரிய நபர்களை கண்டால் உடனே பாதுகாப்பு பணியில் இருக்கும் பொலிசிடம் தகவல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வாணவேடிக்கை காண டிக்கெட் கிடைக்காதவர்கள் வீட்டிலிருந்தே பார்த்து ரசிக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments