லண்டனில் ரயில் விபத்து! போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளதால் பயணிகள் கடுமையான காலதாமதங்களை எதிர்கொள்ளும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

பிரித்தானியாவில் கடும் மூடுபனி காரணமாக சாலைகள் பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளது. இதனால், மக்கள் சாலையில் பயணிக்க திணறி வருகின்றனர்.

இந்நிலையில் Lewisham அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால், லண்டன், Kent பாதையில் போக்குவரத்து இடையூறு உண்டானதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தை தொடர்ந்து பொறியாளர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பல சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கடுமையான கால தாமதங்களை எதிர்கொள்ளும் பயணிகள் சமூக வலைதளம் மூலம் புகார் அளித்து வருகின்றனர்.

விபத்தை உறுதி செய்துள்ள ரயில்வே செய்தி தொடர்பாளர் விபத்தினால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பயணிகள் அவர்கள் பயணம் முன் தங்கள் பயணத்தை சரிபார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments