இளவரசி மேல் ஆடையின்றி இருந்த புகைப்படத்தை விமர்சித்த டிரம்ப்

Report Print Santhan in பிரித்தானியா
1914Shares
1914Shares
lankasrimarket.com

அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டிரம்ப்பை, பிரித்தானிய பிரதமர் தெரசா மே அண்மையில் அமெரிக்கா சென்று வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அப்போது இருவரும் கைகோர்த்து சென்ற சம்பவம் ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரித்தானியாவுக்கு வரவேண்டும் என்று தெரசா மே கூறியிருந்தார். இதனால் அவர் இந்த ஆண்டு பிரித்தானியாவுக்கு வரலாம் என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் டிரம்ப் பிரித்தானியா வருவதற்கு 1.6 மில்லியன் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு மட்டுமின்றி போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். தற்போது அது மேலும் தீவிரவமடையும் என்று கூறப்பட்டு வருகிறது.

கடந்த 2012 ஆம் ஆண்டு பிரித்தானிய இளவரசி பிரான்ஸ் நாட்டில் பிரபல ஹோட்டலில் தங்கியிருந்த போது அவர் மேல் ஆடையின்றி இருந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. அது பெரிதும் சர்ச்சையை கிளப்பியது.

இதற்கு தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டிரம்ப் அன்று தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படி இருந்தால் யாருக்கு தான் அதிக அளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வராது என்று பதிவேற்றம் செய்திருந்தார்.

இதை பிரித்தானிய மக்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள் என்றும் இதனால் டிரம்ப் வருகைக்கு பெரிதும் எதிர்ப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் டிரம்பின் இந்த வருகைக்கான அழைப்பிதழை இளவரசி ஏற்றுள்ளதால் தான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரசா மே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments