ஆட்சியில் 65 ஆண்டுகள் சாதனை படைத்த பிரித்தானிய அரசி இரண்டாம் எலிசபெத்!

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய அரசியாக ஆட்சி பொறுப்பேற்று 65 வருட சாதனை படைத்த முதலாவது பிரித்தானிய முடி மன்னர் என்ற பெயரை பெறுகின்றார் இரண்டாம் எலிசபெத்.

திங்கள் கிழமை இடம்பெறும் இந்த விழா பீரங்கி மரியாதைகளுடன் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த நிகழ்வை குறிக்கும் பொருட்டு அரசியின் படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

2014ல் எடுக்கப்பட்ட இப்படத்தில் அரசியார் 1947ல் இவரது திருமண அன்பளிப்பாக தந்தையாரால் வழங்கப்பட்ட சபையர் நகைகளின் தொகுப்பில் ஆடைகளை அணிந்திருந்தார்.

90வயதுடைய அரசி இந்த நாளை அமைதியாக பிரித்தானியாவின் கிழக்கு பகுதியில் உள்ள அவரது சான்டிரிங்ஹாம் எஸ்டேட்டில் கழிப்பார் என மாளிகை தெரிவிக்கின்றது.

இவரது தந்தையார் அரசர் ஜோர்ஜ் V, 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் திகதி அவரது 56வது வயதில் நுரையீரல் புற்று நோய் காரணமாக மரணமானதை தொடர்ந்து இவர் அரசியானார்.

இவர் 2015 ஆம் ஆண்டு அரசி விக்டோரியாவை விஞ்சி நீண்ட கால சேவை புரியும் அரசியார் என பெயர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments