ஓரினச்சேர்க்கை ஜோடி மீது மர்ம நபர்கள் கொடூர தாக்குதல்: பிரித்தானியாவில் சம்பவம்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஓரினச்சேர்க்கை ஜோடியை தாக்கிய மர்ம நபர்கள் தொடர்பாக ஐந்து நபர்களின் புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர் .

பிரித்தானியாவைச் சேர்ந்த பில் போல்(35), கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய நண்பர் ஜ்பைனெக்ஜட்லொகல்(26) உடன் அப்பகுதியில் உள்ள குறித்த இடத்திற்கு இரயிலில் வெளியில் சென்றுள்ளார்.

அப்போது ரெயிலில் இருந்த மர்ம நபர்கள் இவர்களை தாக்கியுள்ளனர். அதில் போலின் முகத்தில் அவர்கள் தாக்கியதால் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் இருவரும் அதிக பாதிப்புகுள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் பொலிசார் இச்சம்பவம் தொடர்பாக ஐந்து நபர்களின் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளனர். மேலும் இது காதலர் தினத்தன்று நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர்கள் இரயிலில் தூங்கிக்கொண்டிருந்த போது ஒரு குழுவில் இருந்த இரண்டு ஆண்கள் இவர்களை தாக்கியுள்ளதாகவும், இது ஒரு மோசமான செயல் என்றும், உள்நோக்கம் விவகாரத்தால் தாக்கியுள்ளனர் என்று கூறியுள்ளனர்.

மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் சிசிடிவி கேமராக்களை கொண்டு ஐந்து நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாகவும், இது பெரிதும் உதவும் என்று தெரிவித்துள்ளனர்.

இவர்கள் தொடர்பாக தகவல்கள் தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படியும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments