எட்டு மாதக் குழந்தையை கொலை செய்ய அனுமதி வழங்கிய லண்டன் நீதிமன்றம்: அதிர்ச்சி தரும் காரணம்

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அவர்களது எட்டு மாத குழந்தையின் செயற்கை உயிர்காப்பு கருவியை அகற்றும்படி லண்டன் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

பிரித்தானியாவின் லண்டனைச் சேர்ந்தவர்கள் Chris மற்றும் Connie. இவர்களுக்கு கடந்த ஆக்ஸ்ட் மாதம் 4 ஆம் திகதி குழந்தை பிறந்துள்ளது, அதற்கு Charlie Gard's என்று பெயர் வைத்துள்ளனர்.

குழந்தை பிறக்கும் போதே மரபணு குறைபாடு மற்றும் மூளை செயலிழப்பு போன்ற குறைகளுடன் பிறந்துள்ளது.

மருத்துவ ரீதியாக இக்குறைகளுடன் பிறந்த குழந்தைகளை உயிருடன் மீட்பது கடினம், அவர்கள் உயிருடன் மட்டுமே இருப்பார்.

ஆனால் அவர்கள் உடல்களில் எந்த ஒரு அசைவுகளும் இருக்காது. பிறந்தது முதல் குழந்தை கடந்த எட்டு மாதங்களாக செயற்கை உயிர்காப்புக் கருவியின் உதவியுடன் உயிர்வாழ்ந்து வருகிறது.

இந்தக் குழந்தையின் செயற்கை உயிர்காப்புக் கருவியை அகற்றுவதன் மூலம், கௌரவமான மரணத்தை அதற்குப் பெற்றுத் தரவேண்டும் என்று, குழந்தைக்கு லண்டனில் சிகிச்சையளித்து வரும் Great Ormond Street மருத்துவமனை நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பான கடந்த வாரம் நடைபெற்றது. அதில் குழந்தைக்கு என்ன பிரச்சனை இருக்கிறது, என்பது தொடர்பான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அதற்கான தீர்ப்பை லண்டன் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதில், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, குழந்தைக்கு பொருத்தப்பட்டிருக்கும் உயிர்காப்புக் கருவியை அகற்ற மருத்துவமனைக்கு அனுமதியளித்ததுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அந்த இடத்திலே கதறி அழுதனர்.

இந்நிலையில் இது குறித்து குழந்தையின் பெற்றோர் கூறுகையில், தனது குழந்தைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக இணையதளத்தில் கேட்டிருந்தோம். அதற்கு 80,000 பேர் தங்களால் இயன்ற உதவியை செய்தனர்.

இதன் பயனாக தங்களுக்கு £1.2 மில்லியன் பவுண்ட் கிடைத்ததாகவும், இதை வைத்து அமெரிக்காவில் உள்ள பிரபல மருத்துவமனையில் தங்கள் குழந்தையை சிகிச்சை அளிக்கலாம் என்று முடிவு செய்திருந்ததாகவும், அதற்கு அந்த மருத்துவமனையும் அனுமதி அளித்ததாகவும் கூறினர். ஆனால் நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியது தங்களால் தாங்கமுடியவில்லை என்று கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.

பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி லண்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இது குறித்து மேல்முறையீடு செய்வதா, இல்லையா என்று பெற்றோர் தங்களது வழக்கறிஞர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments