பிரித்தானியாவில் அதிகரிக்கும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

எந்த ஆண்டும் இல்லாத வகையில் பிரித்தானியாவில் தற்போது கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளதாக சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள குறிப்பிட்ட 1000 பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட 14 சதவிகிதம் அதிகரித்து தற்போது 658 பில்லியன் பவுண்டுகளில் எட்டியுள்ளதாக அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி பெரும் பணக்காரர்களின் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக இடம்பெறவில்லை என்றாலும் தங்களின் சொத்து மதிப்பை கணக்கிட்டு தாங்களும் பெரும் செல்வந்தர்களே என கூறிக்கொள்ளும் நபர்களின் பட்டியலில் கடந்த ஆண்டை விட 14 பேர் புதிதாக இணைந்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு இப்பட்டியலில் 120 பேர் இருந்துள்ளனர்.

பிரித்தானியாவின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடம் வகிப்பது இந்திய வம்சாவளியினரான ஹிந்துஜா சகோதரர்கள் ஆவர். வீட்டுமனை, சுகாதாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு

உள்ளிட்ட துறைகளில் கோலோச்சும் இவர்களின் சொத்துமதிப்பு 16.2 பில்லியன் பவுண்டுகள். இது கடந்த ஆண்டை விட 3.2 பில்லியன் பவுண்டு அதிகமாகும்.

முதல் 10 செல்வந்தர்கள் பட்டியலில் பிரித்தானியர் ஒருவர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். 26 வயதாகும் Hugh Grosvenor கடந்த ஆண்டு தமது தந்தையின் ஏஸ்டேடை இவரது பெயருக்கு மாற்றியதால் தற்போது குறித்த பட்டியலில் இணைந்துள்ளார்.

புகழ்பெற்ற பிரித்தானிய பாடகி Adele இந்த ஆண்டும் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் நீடிக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் இவர் 40 மில்லியன் பவுண்டு அளவுக்கு சொத்து சேர்த்துள்ளார். இதனால் இவரது சொத்து மதிப்பு 125 மில்லியன் பவுண்டு என உயர்ந்துள்ளது.

பிரித்தானியாவில் செல்வந்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக கூறப்படுவது புத்துயிர் பெற்ற பங்குச் சந்தையின் செயல்பாடுகளையே.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதை கலக்கத்துடன் கண்காணிக்கப்பட்டாலும், பிரித்தானியாவின் பெரும் செல்வந்தர்கள் கோடிகளை குவிப்பதை மிகவும் துல்லியமாக மேற்கொண்டு வந்துள்ளதையே குறித்த செல்வந்தர்களின் பட்டியல் உணர்த்துவதாக பட்டியலை தயார் செய்த Robert Watts குறிப்பிடுகிறார்.

பிரித்தானியாவின் பெரும் செல்வந்தர்களின் பட்டியல் இதோ....

 1. Sri and Gopi Hinduja (Industry, Finance) £16.2bn
 2. Len Blavatnik (Investment, Music, Media) £15.9bn
 3. David and Simon Reuben (Property, Internet) £14bn
 4. Lakshmi Mittal and family (Steel) £13.2bn
 5. Alisher Usmanov (Mining, Investment) £11.8bn
 6. Ernesto and Kirsty Bertarelli (Pharmaceuticals) £11.5bn
 7. Guy, George and Galen Jr Weston and family (Retailing) £10.5bn
 8. Kirsten and Jorn Rausing (Inheritance, Investment) £9.6bn
 9. The Duke of Westminster and the Grosvenor family (Property) £9.5bn
 10. Charlene de Carvalho-Heineken and Michel de Carvalho (Inheritance, Brewing, Banking) £9.3bn
 11. Hans Rausing and family (Packaging) £9.25bn
 12. John Fredriksen and family (Shipping, Oil services) £8bn
 13. Roman Abramovich (Industry, Oil) £8bn
 14. Sir James Dyson and family (Household goods, Technology) £7.8bn
 15. Sir David and Sir Frederick Barclay (Property, Media, Internet retailing) £7.2bn
 16. Mohamed Bin Issa Al Jaber and family (Hotels, Food, Industry) £6.7bn
 17. Earl Cadogan and family (Property) £6.5bn
 18. Jim Ratcliffe (Chemicals) £5.75bn
 19. Nicky Oppenheimer and family (Mining, Diamonds) £5.5bn
 20. Carrie and Francois Perrodo and family (Oil, Gas, Wine) £5.17bn

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments