விபத்தில் கணவனை இழந்த மனைவி: உருக்கமான கடிதம் அனுப்பிய பிரதமர்

Report Print Peterson Peterson in பிரித்தானியா

பிரித்தானிய நாட்டில் ராணுவ வீரர் ஒருவர் விபத்தில் பலியானதை தொடர்ந்து அவரது மனைவிக்கு அந்நாட்டு பிரதமரான தெரசா மே உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

பிரித்தானிய நாட்டை சேர்ந்த ஆண்டி(33) என்ற நபர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தபோது ‘பணியில் இருக்கும்போது உயிரிழந்தால் இழப்பீட்டு தொகையை யாரிடம் கொடுப்பது?’ என்ற கேள்வி ஆண்டியிடம் கேட்கப்பட்டது.

ராணுவத்தில் சேர்ந்தபோது ஆண்டிக்கு திருமணம் நடைபெறவில்லை என்பதால் அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவரின் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.

இதற்கு பின்னர், ஆண்டி சார்லோட் ஹுக்ஸ்(27) என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் நிகழ்ந்த கார் விபத்து ஒன்றில் ஆண்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பணியில் இருந்தபோது அவர் உயிரிழந்ததால் 1,20,000 பவுண்ட் உதவித்தொகை அவருக்கு கொடுக்கப்பட்டது.

ஆனால், ராணுவத்தில் சேர்ந்தபோது நண்பரின் பெயரை பரிந்துரை செய்ததால் மனைவியிடம் பணத்தை கொடுக்காமல் நண்பரிடம் அதிகாரிகள் பணத்தை கொடுத்துள்ளனர்.

‘இப்பணத்தை விரைவில் ஆண்டியின் மனையிடம் ஒப்படைப்பேன்’ என நண்பர் கூறி வந்தாலும், இதுவரை பணத்தை ஆண்டியின் மனைக்கு கொடுக்கவில்லை.

இவ்விவகாரம் பிரதமரான தெரசா மேயின் கவனத்திற்கு சென்றுள்ளது.

மனைவிக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்த பிரதமர் நேற்று சார்லோட்டிற்கு உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ‘உங்களுடைய கணவர் விபத்தில் சிக்கி பலியானதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். இத்துயர சம்பவத்திற்கு எனது இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், உங்களுக்கு சேர வேண்டிய பணம் உங்களது கணவரின் நண்பருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிவேன்.

இவ்விவகாரத்தில் நானே நேரடியாக தலையிட்டு உங்களுக்கு விரைவில் பணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்’ என பிரதமர் தெரசா மே உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments