பிரித்தானியாவுக்கு கடத்தப்படும் பெண்கள்...ஏன் தெரியுமா? அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பாலியல் தொழில் மற்றும் போலி திருமணங்களுக்காக கிழக்கு ஐரோப்பிய பெண்கள் பிரித்தானியாவுக்கு கடத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்லோவாக்கியாவில் ஏழை ரோம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வசிக்கும் மிகப்பெரிய குடியிருப்பு இது தான். அங்கு தொடர்ச்சியாக தண்ணீர் மற்றும் மின்சார வசதி கிடையாது.

அதுமட்டுமின்றி அங்கு அனைவரும் வேலையின்றி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட சமூகங்களை தான் ஆட்கடத்தும் கும்பல் இலக்கு வைக்கின்றன. கிழக்கு ஐரோப்பாவுக்கும், கிளாஸ்கோவுக்கும் இடையே இக்குற்றத்தொடர்பு நடப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளான இவர்கள் பிரித்தானியாவுக்கு கடத்தப்படுகின்றன. இவர்களில் பலர் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர். ஒரு சிலர் போலி திருமணங்களில் ஈடுபடுகின்றனர்.

அதீத வறுமையில் உள்ள அவர்கள் மேம்பட்ட வாழ்க்கை கிடைக்கும் என்ற ஆசை வார்த்தைகளால் ஏமாற்றப்படுகின்றனர்.

இது குறித்து அங்கிருக்கும் பெண் ஒருவர் கூறுகையில், தன்னை அழைத்து தனக்கு யாராவது வேலை தருவதாகவும், தங்குவதற்கு இடம் தருவதாக கூறினால். உடனே செல்வதற்கு தயாராக இருப்பதாகவும் எதை பற்றியும் சிந்திக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments