பிரித்தானிய ரயிலில் வெடி குண்டு வைத்த நபர்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவின் இளைஞர் ஒருவர் ரயிலில் வெடிகுண்டை வைத்து விட்டு சென்றதால், அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2106-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ஆம் திகதி இளைஞர் ஒருவர் Jubilee Line என்ற இரயிலில் மர்மபை ஒன்றை வைத்து சென்றுவிட்டார்.

இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக இரயில் ஓட்டுனருக்கு தெரிவிக்கப்பட்டதல், இரயில் நிறுத்தப்பட்டு அங்கிருந்தவர்கள் மற்றும் ரயிலில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

அதன் பின் அந்த பையை சோதனை செய்த போது, பையில் வெடிகுண்டு மற்றும் பால்பியரிங் போன்றவைகள் இருந்துள்ளது.

இது தொடர்ந்து பொலிசார் நடத்திய தீவிர விசாரணையில் இந்த செயலை செய்தது Damon Smith(20) என்ற இளைஞன் தான் என்பதை கண்டுபிடித்தனர்.

அதன் பின்னர் பொலிசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றத்தில் Damon Smith கூறுகையில் வெடிகுண்டு செய்வது தனக்கு பொழுது போக்கு என்றும், நேரம் செல்லாத நேரங்களில் வெடிகுண்டு செய்வேன் என்று கூறியுள்ளார்.

மேலும் தனக்கு இஸ்லாம் பிடிக்கும் ஆனால் தீவிரவாதி கிடையாது. முதலில் இதை தான் ஒரு பார்க் அல்லது வெறு இடங்களில் வைத்து பார்க்கலாம் என்று தான் முடிவு செய்ததாகவும், ஆனால் இரயிலில் வைத்தால் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால் அப்படி வைத்துச் சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

அதன் பின்னர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், Damon Smith என்ன காரணத்திற்காக செய்திருந்தாலும். இது ஒரு தவறான செயல், அந்த வெடிகுண்டு வெடித்திருந்தால், இரயிலில் இருந்த பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும், உயிர் சேதம் கூட ஏற்பட்டிருக்கலாம்.

இதனால் Damon Smith-க்கு 15-வருடம் சிறைத்தண்டை வழங்குவதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் Damon Smith- அன்றைய தினத்தில் வெடிகுண்டு வெடித்ததா, இல்லை என்பது குறித்து இணையத்தில் தேடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments