பிரித்தானிய அரசியலை முடிவு செய்யும் தேசிய சுகாதார சேவை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவை யார் ஆள வேண்டும் என்பதை முடிவு செய்வதில் NHS எனப்படும் தேசிய சுகாதார சேவை அமைப்பின் பங்கு முக்கியமானது என பெரும்பாலான பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்று இரவு 10 மணி அளவில் முதற்கட்ட முடிவுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

இந்த நிலையில் பிரித்தானியாவை யார் ஆள வேண்டும் என்பதை முடிவு செய்வதில் NHS எனப்படும் தேசிய சுகாதார சேவையினரின் பங்களிப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

NHS-ல் மருத்துவர்கள் மட்டும் 106,596 பேர் பணி புரிகின்றனர். செவிலியர்கள் மற்றும் சுகாதார பார்வையாளர்கள் என 285,763 பேர் பணியாற்றுகின்றனர். மகப்பேறு பிரிவில் பணி புரிபவர்கள் மட்டும் 21,642 பேர். செவிலியர்களுக்கு துணையாக செயல்படுபவர்கள் 147,128 பேர்.

மருத்துவமனை எழுத்தர் மற்றும் அதுசார்ந்த துறையில் பணிபுரிபவர்கள் 93,495 பேர். ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அதுசார்ந்த துறையினர் 132,544 பேர். நிர்வாகத்துறையில் பணியாற்றுபவர்கள் 163,528 பேர். அவசர சேவை ஊர்தியில் பணியாற்றுபவர்கள் 19,783 பேர். என மொத்தம் NHS-ல் மட்டும் 1,185,776 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

1948 ஆம் ஆண்டு யூலை மாதம் 8 ஆம் திகதி செயல்பாட்டுக்கு வந்த தேசிய சுகாதார சேவையின் மேம்பாட்டிற்காக 2016-17 ஆம் ஆண்டில் அரசு ஒதுக்கிய தொகையானது 155.6 பில்லியன் டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments