பிரித்தானியா பொதுத்தேர்தல்: வாக்குசாவடியில் ருசிகர நிகழ்வு

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானியாவின் பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொது தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு இரவு 10 மணிவரை நடைபெறவுள்ளது.

பிரித்தானியா முழுவதும் 40000 மையங்களில் வாக்குபதிவு நடைபெறுகிறது. மொத்தமாக 650 நாடாளுமன்ற உறுப்பினர்களை 46.9 மில்லியன் மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் தெரிவு செய்ய இருக்கிறார்கள்.

வாக்குசாவடிக்கு வாக்களிக்க வந்த பொதுமக்கள் தங்களுடைய நாய்களையும் அழைத்து வந்துள்ளனர். இவர்கள் வாக்களிக்க வாக்குசாவடிக்குள் சென்றபோது, நாய்களை வாக்குசாவடிக்கு வெளியே நிற்க வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

நாய்களும் தங்களுடைய எஜமான்கள் வரும் வரை மிகவும் பொறுமையாக காத்திருந்துள்ளது, இப்படி ஒவ்வொரு வாக்குசாவடிக்கு வெளியே நின்ற நாய்களின் புகைப்படங்கள் வாக்களிக்க வந்த பொதுமக்களின் புகைப்படங்களை விட வைரலாகியுள்ளது.

#DogsAtPollingstations (வாக்குச்சாவடிகளில் நாய்கள்) என்ற ஹேஷ்டேக் சமூகவலைத்தளமான டிவிட்டரில் வைரலாகியுள்ளது.

 • June 09, 2017
 • 03:12 PM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

பிரித்தானியா மகாராணியுடனான 15 நிமிட சந்திப்புக்கு பின்னர் தெரேசா மே அளித்த பேட்டியில், தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய Conservative Party, Democratic Unionist Party-யுடன் இணைந்து ஆட்சி அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

 • June 09, 2017
 • 10:47 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

 • June 09, 2017
 • 10:27 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

 • June 09, 2017
 • 09:46 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

நடந்து முடிந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட Ukip வெற்றி பெறாததால் அக்கட்சியின் தலைவரான Paul Nuttall பதவியிலிருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

 • June 09, 2017
 • 09:34 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

Conservative Party, Democratic Unionists-ன் இணைந்து ஆட்சி அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Conservative Party- 318

Democratic Unionists- 10 (+2)

 • June 09, 2017
 • 09:29 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

12.30 மணியளவில் பக்கிங்காம் அரண்மனைக்கு செல்லும் தெரேசா மே, எலிசபெத் மகாராணியை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி பெறவுள்ளதாக என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 • June 09, 2017
 • 09:22 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

பிரிட்டனில் நியூகாசல் பகுதியில் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குள் கத்தியுடன் புகுந்த ஒருவர் பலரை பணயம் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 • June 09, 2017
 • 09:00 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

 • June 09, 2017
 • 08:37 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

பிரித்தானியாவின் 650 தொகுதிகளில் 648 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை பெறாத நிலையில் தொங்கு பாராளுமன்றம் உருவாகியுள்ளது.

தெரசா மே-வின் கன்செர்வேடிவ் கட்சி 316
ஜெர்மி கார்பைன் லெபர் 261
ஸ்காட்டிஸ் நெசனல் செக்யூரிட்டி 35
லிபரல் டெமோகரட்டி 12
இதர கட்சிகள் 23

 • June 09, 2017
 • 07:53 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

பிரித்தானியாவுக்காக கடமையாற்ற தயாராக இருக்கிறேன்- ஜெர்மி கோர்பின்

 • June 09, 2017
 • 07:02 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

டொலர் மற்றும் யூரோவுக்கு எதிராக பிரித்தானிய பவுண்டின் பெறுமதி 2 வீதத்தில் சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது.

 • June 09, 2017
 • 06:54 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

பெரும்பான்மையை நிரூபிக்க 326 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவலில் Conservative Party- க்கு 315 இடங்களும், Labour Party - க்கு 261 இடங்கள் கிடைத்துள்ளன.

 • June 09, 2017
 • 05:30 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

 • June 09, 2017
 • 05:20 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

 • June 09, 2017
 • 05:16 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

பிரிட்டனில் தொங்கு பாராளுமன்றம் ஏற்பட வாய்ப்பு. ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைப்பதில் சந்தேகம்- பிபிசி

 • June 09, 2017
 • 04:49 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

தற்போது வரை வெளியான முடிவுகளின் படி, 192 பெண் எம்.பிக்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

 • June 09, 2017
 • 04:33 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

Walthamstow தொகுதியில் 80.5 சதவீத வாக்குகள் பெற்று பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளார் Stella Creasy.

அவர் டுவிட்டரில், இந்த வெற்றியால் வாயடைத்து போய்விட்டேன், எதிர்காலம் சிறப்புற தொடர்ந்து எனது சமூகத்தினருக்காகவும், நாட்டுக்காகவும் உழைத்துக் கொண்டிருப்பேன் என தெரிவித்துள்ளார்.

 • June 09, 2017
 • 04:26 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

Conservative Campaign Headquarters உறுப்பினர்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார் பிரதமர் தெரேசா மே.

 • June 09, 2017
 • 04:08 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

 • June 09, 2017
 • 03:53 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

Conservatives
Total 248
Gains 15
Losses 25
Total votes 11,009,108
Vote share 41.59%
Change +5.94
Forecast 320
Labour
Total 228
Gains 30
Losses 3
Total votes 10,719,321
Vote share 40.50%
Change +9.44
Forecast 260

 • June 09, 2017
 • 03:46 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

 • June 09, 2017
 • 03:22 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

Croydon Central தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சியின் வீட்டு வசதித்துறை அமைச்சர் Gavin Barwell தோல்வியை தழுவியுள்ளார்.

 • June 09, 2017
 • 03:04 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

 • June 09, 2017
 • 02:59 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

பிரித்தானிய பொதுத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியை சந்திக்கும் என்று வாக்களிப்பு நடந்து முடிந்த பின்னர் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

இந்த கருத்துக்கணிப்பினை நிரூபிக்கும் விதமாக, தற்போது வெளியாகிக்கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளின் படி, தொழிலாளர் கட்சியே அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளது.

 • June 09, 2017
 • 02:44 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

பிரித்தானிய பொதுத்தேர்தலில் Conservative Party தற்போதைய நிலவரப்படி 190 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தற்போது வரை பெற்றுள்ள வாக்கு எண்ணிக்கை 8,060,411 ஆகும். Conservative Party 178 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தற்போதைய நிலவரப்படி Labour Party பெற்றுள்ள வாக்கு எண்ணிக்கை 7,859,260 ஆகும்.

இந்த இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவு வருகிறது.

 • June 09, 2017
 • 02:16 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் டுவிட்டரில் #GE2017 என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகியுள்ளது.

 • June 09, 2017
 • 02:13 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

 • June 09, 2017
 • 02:10 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

Islington North தொகுதியில் ஜெர்மி கோர்பின் அபார வெற்றி பெற்றுள்ளார். 40, 086 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

 • June 09, 2017
 • 01:51 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

Sheffield Hallam பகுதியில் முன்னாள் Liberal Democrat தலைவரான Nick Clegg தோல்வியை சந்தித்துள்ளார்.

 • June 09, 2017
 • 01:48 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

East Renfrewshire பகுதியில் Conservatives கட்சியை சேர்ந்த Paul Masterson0 21,496 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

 • June 09, 2017
 • 01:41 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

 • June 09, 2017
 • 01:36 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

6 அணி அளவில் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளின் முடிவுகளும் வந்துவிடும் என்றும், அப்போது யார் வெற்றி பெறுவார் என்பதை கணிக்க முடியும்.

 • June 09, 2017
 • 01:33 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

கட்சிகள் வெற்றி
Labour Party71
Conservative Party59
Scottish National Party13
Democratic Unionist Party 3
Others2

 • June 08, 2017
 • 09:11 PM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

பிரித்தானியாவில் தற்போது நடைபெற்று வரும் வாக்குப் பதிவு உள்ளூர் நேரப்படி இரவு 10 மணியுடன் முடிவடைகிறது. இது நீட்டிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியாகும், இந்நிலையில் காலை 4 மணி அளவில் தெரசா மே போட்டியிடும் பகுதியின் முடிவுகள் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

 • June 08, 2017
 • 07:32 PM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

பிரித்தானியாவில் தற்போது நடைபெற்று வரும் பொதுத் தேர்தலில் திரைப்பிரபலங்கள் மற்றும் கலைஞர்கள் தாங்கள் வாக்குப் பதிவு செய்ததைப் பற்றி கூறியுள்ளனர்.

 • June 08, 2017
 • 06:53 PM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

பிரான்ஸ் இதழ் ஒன்றில் தெரசா மேவின் சர்ச்சையான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அப்புகைப்படம் வாக்குப் பதிவு ஆரம்பித்த சில மணி நேரங்களில் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • June 08, 2017
 • 05:56 PM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

பிரித்தானியாவில் நடைபெற்று வரும் தேர்தலில் பொதுமக்கள் ஓட்டு போட வரும் போது தங்களுடன் நாய், குதிரை போன்ற செல்ல பிராணிகளை உடன் அழைத்து வந்துள்ளனர்.

அதில் ஒரு பெண் தான் ஒட்டுப் போட வரும் போது, தன்னுடைய செல்லப் பிராணியான guinea pig-ஐ உடன் அழைத்து வந்துள்ளார். அது தொடர்பான புகைப்படம் டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 • June 08, 2017
 • 02:50 PM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

பிரித்தானியாவில் ஊடக, சமூக வலைதளங்களில் பிரபலமான 22 பேர் ஜெரமி கோர்பினையும் 4 பேர் மட்டும் பிரதமர் தெரேசா மேவையும் ஆதரித்து வாக்களித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

 • June 08, 2017
 • 01:17 PM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

West Belfast தொகுதியில் போட்டியிடும் Alliance party வேட்பாளர் Sorcha Eastwood புதிதான திருமணம் செய்து கொண்ட தனது கணவர் Dale Shirlow - வுடன் வந்து வாக்களித்துள்ளார். வாக்களிக்க வரும்போது இவர்கள் இருவரும் திருமண ஆடையில் வந்துள்ளனர்.

 • June 08, 2017
 • 12:21 PM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

ஒவ்வொரு வாக்குசாவடிக்கு வெளியே நின்ற நாய்களின் புகைப்படங்கள் வாக்களிக்க வந்த பொதுமக்களின் புகைப்படங்களை விட வைரலாகியுள்ளது. மேலதிக தகவல்களுக்கு

 • June 08, 2017
 • 12:20 PM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

லண்டன் தாக்குதலின் போது ஹீரோவாக செயல்பட்ட Geoff Ho தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், எதிர்பாராதவிதமாக இன்று என்னால் வாக்களிக்க முடியவில்லை, உங்கள் அனைவரையும் வாக்களிப்பதற்காக ஊக்கப்படுத்துகிறேன், மாற்றத்தை ஏற்படுத்துங்கள்! நன்றி என பதிவிட்டுள்ளார்.

 • June 08, 2017
 • 11:57 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

மழையையும் பொருட்படுத்தாமல் வாக்களிக்க வரும் பிரித்தானியா மக்கள்

 • June 08, 2017
 • 11:55 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

LibDem தலைவரான Tim Farron-யை படமெடுக்க முயன்ற போது புகைப்பட நிருபர்களுக்கும், கமெராமேன்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 • June 08, 2017
 • 10:28 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

பிரித்தானியாவை யார் ஆள வேண்டும் என்பதை முடிவு செய்வதில் NHS எனப்படும் தேசிய சுகாதார சேவையினரின் பங்களிப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலதிக தகவல்களுக்கு

 • June 08, 2017
 • 09:21 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

பொதுத்தேர்தலில் வாக்களித்த பின்னர் பேட்டியளித்த ஜெரமி கோர்பின், இங்கு வந்தமைக்காக உங்கள் அனைவருக்கும் நன்றி, இன்று ஜனநாயக நாள், நான் வாக்களித்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

Frank Augstein/AP

 • June 08, 2017
 • 08:29 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

தனது வாக்கினை பதிவு செய்தார் பிரதமர் தெரெசா மே

Alastair Grant/AP

 • June 08, 2017
 • 08:17 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

ஸ்காட்லாந்தின் Glasgow நகரில் SNP தலைவர் Nicola Sturgeon தனது வாக்கினை பதிவு செய்தார்.

 • June 08, 2017
 • 08:04 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

 • June 08, 2017
 • 07:13 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கும் பொதுமக்கள்

Amer Ghazzal/REX/Shutterstock

 • June 08, 2017
 • 06:58 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

 • June 08, 2017
 • 06:27 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் நடப்பதை முன்னிட்டு கூகுள் டூடூல் மூலம் கௌரவப்படுத்தியுள்ளது.

 • June 08, 2017
 • 06:19 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

தேர்தலில் வாக்களிக்க தகுதியான நபராக இருப்பின் உங்களுக்கென்று குறிப்பிட்டுள்ள Polling Stations-ல் வாக்களிக்க வேண்டும், இதுபற்றிய மேலதிக தகவல்களை https://www.yourvotematters.co.uk/இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

 • June 08, 2017
 • 06:11 AM
பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

பிரித்தானியாவில் பொதுத்தேர்தலுக்கான வாக்குபதிவு உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது.

Load More

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments