பிரதமர் தெரேசா மேயை பதவி விலக வலியுறுத்தி மனு: இறுதி தீர்மானம் இன்று

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா

பிரதமர் தெரேசா மேயை பதவி விலகுமாறு வலியுறுத்தி சுமார் 3 இலட்சத்திற்கும் அதிகமான பிரித்தானியர்கள் கையெழுத்திட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

பிரித்தானியா பொதுத்தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை இழந்த தெரேசா மே தலைமையிலான கன்சேர்வேட்டிவ் கட்சி, ஜனநாயக ஒன்றியக் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க தீர்மானித்தது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் ஆட்சி அமைப்பதற்கு 326 ஆசனங்களை பெற்று பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும்.

ஆனால் ஆளும் கன்சேர்வேட்டிவ் கட்சியும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும் பெரும்பான்மையை நிரூபிக்க தவறின.

கன்சேர்வேட்டிவ் கட்சி 318 ஆசனங்களை பெற்ற அதேவேளை, தொழிலாளர் கட்சி 262 ஆசனங்களை பெற்றது.

அதனை தொடர்ந்து மகாராணி எலிசபெத்தை நேற்று சந்தித்த தெரேசா மே, ஜனநாயக ஒன்றியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதற்கு மகாராணியின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெரேசா மேயின் புதிய அமைச்சரவை குறித்த இறுதி தீர்மானம் இன்று!

ஜனநாயக ஒன்றியக் கட்சியுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைத்துள்ள தெரேசா மே இன்று புதிய அமைச்சரவை குறித்த விபரங்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிலிப் ஹாமண்ட், ஆம்பர் ருத், பொரிஸ் ஜோன்சன், மைக்கல் ஃபெலோன் மற்றும் டேவிட் டேவிஸ் ஆகியோர் ஏற்கனவே இருந்த அதே பதவியில் நீடிக்கவுள்ளனர்.

எனினும், கன்சேர்வேட்டிவ் கட்சியின் எட்டு அமைச்சர்கள் பொதுத் தேர்தலில் தங்களது ஆசனங்களை இழந்த நிலையில், அவர்களுக்கு பதிலாக புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.


You may like this video

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments