பிரித்தானியா தேர்தலில் பின்னடைவு: தெரசா மே-வின் முக்கிய ஆலோசகர்கள் திடீர் முடிவு

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் நடந்த பொதுத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதால், பிரதமர் தெரசா மேயின் இரண்டு ஆலோசகர்கள் தங்கள் பதவியை ராஜினிமா செய்துள்ளனர்.

பிரித்தானியாவில் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குப் பதிவு நடைபெற்ற சில மணி நேரங்களிலே வாக்கு எண்ணிக்கையும் துவங்கியது.

பிரித்தானியாவில் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால் மொத்தம் உள்ள 650 இடங்களில் 326 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அவ்வாறு வெற்றி பெறும் கட்சியே அந்நாட்டில் ஆட்சி அமைக்கும், ஆனால் சமீபத்தில் முடிந்த தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

தெரசா மே-வின் கன்சர்வெடிவ் கட்சி 318- இடங்களையும், எதிர்கட்சியான ஜெர்மி கார்பைனின் கட்சி 262 இடங்களை கைப்பற்றியது. ஆட்சியமைப்பதற்கான மெஜாரிட்டி எந்தக் கட்சிக்கும் கிடைக்காததால், வடக்கு அயர்லாந்தின் டியுபி கட்சியுடன் கூட்டணி அமைத்து கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியமைக்க உள்ளது. தெரசா மே மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் தேர்தலில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு பொறுப்பேற்று பிரதமர் தெரசா மேயின் நெருங்கிய ஆலோசகர்களான திமோதி மற்றும் ஹில் ஆகியோர் இன்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

கூட்டுத் தலைவர்களில் நம்பிக்கைக்குரிய தலைவர்களாக விளங்கிய இருவரும் மிகப்பெரிய வெற்றி பெறுவோம் என்று பிரதமரிடம் கூறி வந்த நிலையில், பெரும்பான்மை பெற முடியவில்லை.

இதற்கு முக்கிய காரணம் தேர்தல் அறிக்கைதான் என்று கூறப்படுகிறது. கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களுக்கு எம்.பி.க்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

தேர்தல் அறிக்கை தயாரிப்பில் ஈடுபட்ட அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஒரு எம்.பி. வலியுறுத்தினார். எனவே, இருவரும் ராஜினாமா செய்துள்ளனர்.மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments