லண்டனில் 5 பேர் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்கள்: வாகனங்களை திருடி சென்றனர்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் சாலையில் சென்ற 5 பேர் மீது மர்ம நபர்கள் இரண்டு பேர் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியதில் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் லண்டனில் உள்ள Hackney மற்றும் Stoke Newington பகுதிகளில் உள்ள சாலைகளின் வெவ்வேறு இடங்களில் நேற்று இரவு 10.25லிருந்து அடுத்த 90 நிமிடங்களுக்கு 5 பேர் மீது ஆசிட் வீசப்பட்டுள்ளது.

சரியாக 10.25 மணிக்கு 32 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

அவரருகில் ஸ்கூட்டரில் வந்த இரண்டு மர்ம நபர்கள், முகத்தில் ஆசிட் வீசிவிட்டு அவரின் ஸ்கூட்டரை திருடி சென்றுள்ளனர்.

பின்னர் 11.05 மணியளவில் Shoreditch நெடுஞ்சாலையில் இரண்டு மர்ம நபர்கள் சேர்ந்து அங்கிருந்த ஒருவர் முகத்தில் ஆசிட் வீசியுள்ளனர்.

அதன் பிறகு 11.18 மணிக்கு Cazenove சாலையில் திருட்டு நடந்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்துக்கு பொலிசார் சென்ற போது அங்கு ஒருவர் ஆசிட் வீச்சு தாக்குதலால் பாதிப்படைந்துள்ளதை கண்ட பொலிசார் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதே போல 11.37 மணியளிவில் அடுத்தடுத்து இரண்டு ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளது, இதில் ஒருவரது ஸ்கூட்டரை இரண்டு மர்ம நபர்கள் சேர்ந்து திருடி சென்றுள்ளனர்.

தாக்குதலில் பாதிப்படைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவரை பொலிசார் சந்தேகத்தின் பேரின் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments