தாயை விஷ ஊசி போட்டு கொன்ற மகள்..நீதிமன்றத்தில் கூறிய மனதை உருக வைக்கும் காரணம்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் பெண் ஒருவர் தனது வயது முதிர்ந்த தாயை விஷ ஊசி போட்டு, தலையணையால் அழுத்தி கொன்ற சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

லண்டன், கிரைய்டன் பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. 55 வயதான Shirley D’Silva பெண்ணே தனது 77 வயதான தாயை கொன்றுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் திகதி பெண் ஒருவர் அவசர உதவி மையத்தை தொடர்புக்கொண்டு தனது தாயை கொன்றுவிட்டதாக கூறியுள்ளார்.

சம்பவம் குறித்த பொலிசார் நடத்திய விசாரணையில் Shirley D’Silvaவுக்கு முன்னதாக மனச்சிதைவு நோய் இருந்தது தெரியவந்துள்ளது. நீதிமன்ற விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட Shirley D’Silva கதறி அழுதுள்ளார்.

மேலும், தனது தாய் பல காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதால், அவருக்கு உதவும் விதத்தில் அவரை கொன்றதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போதும், அவர் மனச்சிதைவு நோயால் அவதிப்பட்டு வருவதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தண்டனையை ஒத்திவைத்துள்ளார்.

D'Silva, மனநல சுகாதார சட்டத்தின் பிரிவு 37 மற்றும் 41 ன் கீழ் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments