இளவரசி டயானாவுக்கு இத்தனை காதலர்களா? வெளியான ஆச்சரிய தகவல்கள்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியா இளவரசி டயானா கடந்த 1997 ஆகஸ்ட் 31ஆம் திகதி கார் விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.

டயானா உயிரிழந்து 20 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் தனியார் தொலைகாட்சி ஒன்று Diana, Our Mother: Her Life and Legacy என்ற பெயரில் டயானா குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது.

இதில் டயானா குறித்து அவர் மகன்களான இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி மனம் திறந்து பேசியுள்ளனர்.

இதனிடையில், டயானாவுக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. டயானாவுக்கும் அவர் கணவர் சார்லசுக்கும் கடந்த 1996ஆம் ஆண்டு விவாகரத்து ஆனது.

சார்லஸுடன் வாழும் போதும், விவாகரத்துக்கு பின்னரும் டயானாவுக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்துள்ளது.

பிரபல இசை கலைஞர் Bryan Adams உடன் டயானாவுக்கு தொடர்பு இருந்தது. இது குறித்து Bryanன் முன்னாள் காதலியான Cecile Thomsen வெளிப்படையாக முன்னர் ஒரு சமயம் கூறியுள்ளார்.

அதே போல ரக்பி விளையாட்டு வீரர் Will Carling உடனும் டயானாவுக்கு தொடர்பு இருந்துள்ளது.

உடற்பயிற்சி கூடத்தில் இருவரும் சந்தித்து கொண்ட போது நட்பு ஏற்பட்டது. இருவரின் தொடர்பு காரணமாக தான் 1996ல் Carlingக்கு ஜூலியா என்ற பெண்ணுடன் நடக்கவிருந்த திருமணம் நின்றதாக அப்போதே கூறப்பட்டது.

பிறகு குதிரைப்படை அதிகாரியான James Hewittயுடன் டயானா காதல் கொண்டிருந்தார்.

Oliver Hoare என்ற திருமணமான ஓவியருடன் டயானாவுக்கு 1994ல் தொடர்பு இருந்தது. இதற்கு பின்னர் தான் கோடீஸ்வரர் Mohamed Al-Fayedன் மகன் Dodi Fayedஐ டயானா காதலித்தார்.

அவருடன் காரில் செல்லும் போது தான் விபத்தில் சிக்கி டயானாவும், Dodiயும் உயிரிழந்தார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers