இரண்டு முறை திருமண கொண்டாட்டம்: இளவரசர் ஹரியின் சுவாரசிய திட்டம்

Report Print Raju Raju in பிரித்தானியா
369Shares
369Shares
ibctamil.com

இளவரசர் ஹரி மற்றும் மேகன் திருமண நிகழ்வை பிரித்தானியா மற்றும் அமெரிக்கா என இரண்டு இடங்களில் இருமுறை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரியும், அமெரிக்க நடிகை மேகனும் கடந்த ஒரு வருடமாக தீவிரமாக காதலித்து வருகிறார்கள்.

தனது திருமணம் குறித்த அறிவிப்பை ஹரி எப்போதும் வேண்டுமானாலும் வெளியிடலாம் என எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில், பிரபல Woman’s Day பத்திரிக்கை ஹரியின் திருமணம் குறித்த சில சுவாரசிய தகவலை வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவில் மிகவும் ஆடம்பரமாகவும், பிரம்மாண்டமாகவும் ஹரி- மேகன் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், மணமக்களின் உறவினர்கள் அதிகளவில் கலந்து கொள்ள இருப்பதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கடுத்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் மீண்டும் இருவரும் திருமண நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதில் டென்னீஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா, பிரபல பாடகியும் ஹரியின் தோழியுமான Ellie Goulding ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்