பிரித்தானியா நாடாளுமன்றத்தில் Brexit மசோதா நிறைவேறியது

Report Print Fathima Fathima in பிரித்தானியா
552Shares
552Shares
lankasrimarket.com

ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவது தொடர்பான மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு ஆதரவாக 326 எம்பிக்களும், எதிராக 290 எம்பிக்களும் வாக்களித்தனர்.

பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் எதிர்ப்பை தவிர, தெரேசா மே தலைமை வகிக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியில் பலரே மசோதாவுக்கு எதிராக இருந்தனர்.

இதேபோன்று தொழிலாளர் கட்சியை சேர்ந்த 7 எம்பிக்கள், கட்சி கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதனை தொடர்ந்து கணிசமான வாக்கு வித்தியாசத்தில் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், 2019ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் முழுமையாக வெளியேறிவிடும்.

இதனையடுத்து பிரிட்டன் நாடாளுமன்ற கீழவை நிலைக் குழுவின் பரிசீலனைக்கு மசோதா அனுப்பப்படும்.

இந்நிலையில் பிரிட்டனில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் அனைத்தும் பிரிட்டன் சட்டங்கள் என்ற முறையில் தொடரும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்