லண்டன் பிரிட்ஜ் ரயில் நிலையம் மூடல்..ஆயுதங்களுடன் சூழ்ந்த பொலிசார்

Report Print Basu in பிரித்தானியா

லண்டன் பிரிட்ஜ் சுரங்க ரயில் நிலையத்திலிருந்து மக்கள் வெளியேற்றிய பொலிசார் அப்பகுதியை சுற்றிவளைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பார்சன்ஸ் கிரீன் சுரங்க ரயில் தாக்குதலை தொடர்ந்து லண்டன் பிரிட்ஜ் ரயில் நிலையத்தை சுற்றி ஆயுதமேந்திய பொலிசாரும், வாகனங்களும் சூழ்ந்ததால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

சம்பவம் குறித்து பிரித்தானியா போக்குவரத்துறை பொலிஸ் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, லண்டன் பிரிட்ஜ் சுரங்க ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் ரயிலில் சிக்கியதாக தகவல் வந்தது.

இதனையடுத்து, மருத்துவ உதவியாளர்களுடன் பொலிசார் சம்பவயிடத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவனைமக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்படவில்லை. எனினும், ரயில் பாதையில் சிறிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதால் ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது. விரைவில் பாதை சரி செய்யப்பட்டு ரயில் நிலையம் திறக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...