பிரதமர் தெரேசா மேயை பதவி விலகக் கோரி எதிர்ப்பு நடவடிக்கை

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா
பிரதமர் தெரேசா மேயை பதவி விலகக் கோரி எதிர்ப்பு நடவடிக்கை
168Shares
168Shares
lankasrimarket.com

பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே, பதவி விலக வேண்டும் என்று எதிர்ப்புக் கிளம்பியுள்ளதால், அவர் நெருக்கடியில் சிக்கியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் அதிகளவான மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

இந்நிலையில், பிரெக்சிற் விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலக நேரிட்டது. அவருக்குப் பதிலாக பிரதமராக தெரேசா மே பதவியேற்றார்.

ஆட்சிக்காலம் முடிவடைய 3 ஆண்டுகள் இருந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு அவர் அறிவித்தார். அதில் அவரது கொன்சர்வேட்டிவ் கட்சிக்குப் பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்கவில்லை. கூட்டணி மந்திரி சபை அமைக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். இதனால், கட்சிக்குள் அவருக்கு எதிர்ப்புக் கிளம்பியது. பிரதமர் பதவியை ராஜினாமாச் செய்ய கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இருந்தாலும், அதைச் சமாளித்துக்கொண்டு தாக்குப் பிடித்து தனது பதவியை தக்கவைத்துக் கொண்டார்.

தற்போது மீண்டும் தெரசா மேக்கு கட்சியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர் பிரதமர் பதவியிலிருந்து விலக வலியுறுத்தி கொன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் தலைவர் கிரான்ட் சாப்ஸ் திடீரென்று போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

ஆளும் கட்சியை சேர்ந்த 30 எம்.எல்.ஏக்களுடன் இணைந்து தெரேசா மேவுக்கு எதிரான நடவடிக்கையில் இவர் ஈடுபட்டுள்ளார். தெரேசா மேயை எதிர்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் முன்னாள் அமைச்சர்களும் அடங்குகின்றனர். கட்சித் தலைவர் மற்றும் பிரதமரை மாற்றுவதற்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் 48 பேர் இணைந்து குழுவுக்கு மனுக் கொடுக்க வேண்டும்.

அதற்கான நடவடிக்கையில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார் எனவும் இதனால், பிரதமர் தெரேசா மே நெருக்கடியில் சிக்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்