பிரித்தானிய அரச குடும்பம் இதை செய்ய தடை உள்ளது தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா
1432Shares
1432Shares
lankasrimarket.com

பிரித்தானிய அரச குடும்பத்தினர் சாப்பிட தடை செய்யப்பட்ட உணவு மற்றும் அவர்கள் விளையாட தடை செய்யப்பட்ட விளையாட்டு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்த எலிசபெத் மகாராணி, இளவரசர் வில்லியம், இளவரசர் ஹரி, கேட் மிடில்டன் ஆகியோர் தங்களது ஓய்வு நேரத்தில் கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளை விளையாடுவார்கள்.

ஆனால் அவர்கள் Monopoly என்ற பலகை விளையாட்டை விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை மகாராணியின் மகன் இளவரசர் ஆண்ட்ரு கூறியதாக பிரபல Telegraph பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

அதே போல அரச குடும்பத்தினர் வெளியிடங்களுக்கு சென்றால் shellfish என்ற உணவு வகையை சாப்பிட தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த உணவு வகை புட் பாய்சன் ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளதால் தடை செய்யப்பட்டுள்ளது.

பொது வெளியில் அரச குடும்பத்தினர் மக்களை சந்திக்கும் போது ஆட்டோகிராப் போடவும் தடை உள்ளது.

காரணம், அரச குடும்பத்தினரின் கையெழுத்து, மோசடி செயலுக்கு தவறாக பயன்படுத்தபடலாம் என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்