இதுவல்லவா காதல்! புற்றுநோயால் உயிரிழந்த மனைவி: அடுத்த நொடி உயிரை விட்ட கணவன்

Report Print Raju Raju in பிரித்தானியா
369Shares
369Shares
lankasrimarket.com

புற்றுநோயால் மனைவி உயிரிழந்த நிலையில், அவரை பிரிய மனமில்லாத கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Ainsdale நகரை சேர்ந்தவர் Rowland Hilton (82). இவர் மனைவி Mary (79).

இருவருக்கும் திருமணமாகி 60 ஆண்டுகள் ஆகிறது. தம்பதிகள் ஒருவருக்கொருவர் உயிராக நேசித்து வாழ்ந்து வந்தார்கள்.

Mary-க்கு பல வருடங்களாகவே நுரையீரல் புற்றுநோய் இருந்த நிலையில் அதற்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், திடீரென நோய் முற்றிய நிலையில் வீட்டிலேயே Mary உயிரிழந்தார். இதை கண்டு துடித்து போன Rowland மனைவி இல்லாத உலகில் வாழ விருப்பமில்லாமல் தற்கொலை செய்து கொண்டார்.

இறப்பதற்கு முன்னர் Rowland எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதை முன்னரே அவர் எழுதி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் கடந்த மே மாதம் நடந்த நிலையில் தற்போது வெளியில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த தம்பதியின் உறவினர் ஒருவர் கூறுகையில், அவர்கள் இருவரும் எப்போதும் ஒன்றாக இருப்பார்கள்.

பருவ வயதில் Rowland-ம், Mary-ம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இறப்பிலும் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளார்கள்.

Rowland வீட்டுக்கு அவர் இறப்பதற்கு ஒருவாரம் முன்னர் நான் சென்ற போது Mary கவலைக்கிடமாக இருந்தார். ஆனால், Rowland தெம்பாக இருந்தார் என கூறியுள்ளார்.

தம்பதி மரணத்தில் ஆரம்பத்தில் சந்தேகம் இருந்த நிலையில், Mary இயற்கையாக மரணமடைந்தார் எனவும், Rowland தற்கொலை தான் செய்து கொண்டார் எனவும் பின்னர் உறுதியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்