பிரித்தானியாவில் துப்பாக்கிகளை இறக்குமதி செய்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் 12 பேர் கைது

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா
பிரித்தானியாவில் துப்பாக்கிகளை இறக்குமதி செய்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் 12 பேர் கைது
108Shares
108Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் எல்லைப் படை அதிகாரி ஒருவர் உட்பட 12 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், இச்சந்தேக நபர்களிடமிருந்து துப்பாக்கிகளையும் போதைப்பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.

பிரித்தானியாவுக்கு போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளை குழுவொன்று இறக்குமதி செய்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து, பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களிடமிருந்து 11 துப்பாக்கிகளையும் 7 கிலோகிராம் நிறையுடைய போதைப்பொருளையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து 6 பேர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருளை இறக்குமதி செய்வதற்கு இவர்கள் உதவியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்