வடகொரியாவுடன் போருக்கு தயாராகும் பிரித்தானியா

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா
வடகொரியாவுடன் போருக்கு தயாராகும் பிரித்தானியா
278Shares
278Shares
lankasrimarket.com

வடகொரியாவுடன் இராணுவ மோதலுக்கான திட்டங்களை வகுக்குமாறு பிரித்தானிய இராணுவ படையினருக்கு, பிரதமர் தெரேசா மே தலைமையிலான அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

கிம் ஜோங்-உன்னின் ஆட்சியை எதிர்த்து இராணுவ நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது டுவிட்டரில் வெளியிட்டதை தொடர்ந்து பிரித்தானியாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வடகொரியா அண்மையில் ஜப்பானை இலக்குவைத்து ஆறாவது முறையாக ஏவுகணை சோதனை நடத்தியிருந்தது.

அதற்கு முன்னரும் வடகொரியா பலமுறை ஏவுகணை மற்றும் அணுவாயுத திட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்