பிரித்தானியாவில் தங்கியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தவர்கள் நாடு கடத்தப்படும் அபாயம்!

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா

பிரெக்சிற்றின் (Brexit) பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தவர்கள், நாடுகடத்தலுக்கு எளிதாக இலக்காகக் கூடும் அபாயம் காணப்படுவதாக உள்துறை அலுவலகத்தின் குடியேற்ற அமுலாக்க முன்னாள் சிரேஷ்ட தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மக்களவை விவகாரங்களுக்கான தேர்வுக் குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வளங்கள் மீதான அழுத்தம் காரணமாக, தமது விசா காலம் கடந்து தங்கியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தவர்கள் இவ்வாறு இலகுவாக வெளியேற்றப்படக்கூடும் என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

எனவேதான், பிரித்தானியாவில் தங்கியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் பல பாகங்களில் வசிக்கும் பிரித்தானியர்களின் எதிர்கால உரிமைகள் மற்றும் அவர்கள் எவ்வாறு சட்டத்தில் உள்வாங்கப்படுவார்கள் என்பன, நடப்பு பிரெக்சிற பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகிக்கிறது எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...