எங்கள் வலியை நீ உணரமாட்டாய் மகளே! உயிரிழந்த இளம் பெண்... தவிக்கும் குடும்பம்

Report Print Raju Raju in பிரித்தானியா
308Shares
308Shares
lankasrimarket.com

சக்தி வாய்ந்த போதை மாத்திரையை உட்கொண்டதால் இளம் பெண் உயிரிழந்த நிலையில், அப்பெண்ணின் பிரிவால் அவரின் குடும்பம் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.

பிரித்தானியாவின் Essex கவுண்டியை சேர்ந்தவர் Amy Vigus (20). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி லண்டனில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட Amy சக்தி வாய்ந்த போதை மருந்தை உட்கொண்டுள்ளார்.

நிகழ்ச்சி முடிந்து அடுத்தநாள் தனது வீட்டில் சுவாச கோளாறு பிரச்சனையால் திணறிய Amy அப்படியே மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக குடும்பத்தினர் Amy-ஐ மருத்துவமனையில் கொண்டு சேர்க்க அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தார்கள்.

Amy-ன் பிரேத பரிசோதனை முடிவில் அவர் உடலில் நச்சுதன்மை வாய்ந்த சக்திவாய்ந்த போதை மருந்து கலந்திருந்தது தெரியவந்தது.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், Amy-ன் குடும்பத்தினர் அவர் பிரிவை தாங்கி கொள்ளமுடியாமல் தவித்து வருகின்றனர்.

Amy மகிழ்ச்சியாக இருந்த தருணங்களை அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு வீடியோவாக பதிவுசெய்து குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.

Amy குடும்பத்தார் கூறுகையில், ஒரு கணத்தில் போதை மாத்திரையை சாப்பிட்டு முட்டாள்தனமான காரியதை அவள் செய்துவிட்டாள்.

எங்கள் Amy இனி எப்போதும் சிரிக்கமாட்டாள். கிறிஸ்துமஸ் பண்டிகையையும், பிறந்தநாளையும் இனி அவளால் கொண்டாட முடியாது.

Amy எங்களுக்கு ஏற்படுத்திய வலியை அவளால் என்றுமே இனி உணர முடியாது என வேதனையுடன் கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்