டயானாவுக்கு வழங்கப்பட்ட விருது: நெகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட இளவரசர் ஹரி

Report Print Raju Raju in பிரித்தானியா
212Shares
212Shares
lankasrimarket.com

டயானாவுக்கு பிரபல பத்திரிக்கை வழங்கிய விருதை அவர் சார்பில் அவரின் மகனான இளவரசர் ஹரி பெற்றுகொண்ட தருணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய இளவரசி மறைந்த டயானா தான் வாழ்ந்த காலத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நிறைய தொண்டுகள் செய்துள்ளார்.

இதை கெளரவிக்கும் விதத்தில் அவருக்கு பிரபல Attitude பத்திரிக்கை சாதனையாளர் விருதை வழங்கியது.

டயானா சார்பில் அவர் மகனான இளவரசர் ஹரி விருதை பெற்றுக்கொண்டார்.

தாய் டயானா குறித்து நினைவுகூர்ந்த ஹரி பேசுகையில், கடந்த 1987-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டயானா எய்ட்ஸ் நோயாளிகளை பார்க்க சென்றார்.

அப்போது அவருக்கு 25 வயதிருக்கும். அந்த சமயத்தில் எய்ட்ஸ் நோயாளிகளை எல்லோரும் ஒதுக்குவார்கள், அவர்களிடம் செல்ல மாட்டார்கள்.

ஆனால், டயானா அவர்களிடம் கைகொடுத்து அன்போடு பேசினார். 32 வயதான ஒரு எய்ட்ஸ் நோயாளி ஒருவரிடம் கைகொடுத்து பேசினார்.

உலகின் மிக பிரபலமான பெண்ணான டயானா அப்படி செய்வதால் தன்னை பார்த்து எல்லோரும் எய்ட்ஸ் நோயாளிகளிடம் கனிவாக இருப்பார்கள் என்பதற்காகவே அவர் அப்படி செய்தார் என ஹரி கூறினார்.

தனது தாயை போல ஹரியும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான தொண்டுகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்