முதியவரிடம் திருட முயன்ற இலங்கையர்: தேடுதல் வேட்டையில் பிரித்தானியா பொலிசார்

Report Print Vethu Vethu in பிரித்தானியா

பிரித்தானியாவில் இலங்கையர் உட்பட இருவர் செய்த மிகவும் மோசமான செயற்பாடு குறித்து அந்நாட்டு பொலிஸார் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அல்சைமர் எனப்படும் மறதி நோயாளியை திசை திருப்பி அவரது சேமிப்பு பணத்தை திருட முயன்ற இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Tatsfield, Surrey பகுதியில் 77 வயதான நபரின் வீட்டிற்கு சென்ற இருவர், இதுவரை செய்யாத வேலைக்கு தாம் பணியாளர்களாக செயற்பட்டதாக கூறி பணம் கோரியுள்ளனர்.

குறித்த வயோதிபரின் வங்கி கணக்கில் இருந்து தனது சேமிப்புகளைத் திரும்பப் பெற அவரது வீட்டிலிருந்து அவரை அழைத்துச் செல்வதற்கு முன்னர் அவரது பணப்பையில் இருந்து 150 பவுண்டுகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தை அவதானித்த அயல்வீட்டு நபருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவர்களை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சித்துள்ளார், எனினும் குறித்த இருவரும் Audi A3 காரில் ஏறி சென்றுள்ளனர்.

வயதான மனிதரின் வாழ்நாள் சேமிப்புக்களை திருட முயற்சிப்பது ஒரு இழிவான மற்றும் கோழைத்தனமான குற்றமாகும் என துப்பறியும் கான்ஸ்டபிள் Ben Briselden தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி மதியம் 2.50 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் குற்றவாளிகளை கைது செய்வதற்காக அவர்களது சி.சி.டி.வி. படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

முதல் சந்தேக நபர் ஒரு இந்தியர் எனவும், சாம்பல் நிறம் அணிந்திருந்ததாகவும், குறிப்பிடப்படுகின்றது.

இரண்டாவது நபர் ஒரு இலங்கையர் போன்றிருந்ததாகவும், அவர் அடர்த்தியான நிறத்தில் ஆடை அணிந்திருந்ததாவும், கழுத்தில் மெல்லிய கழுத்துத்துண்டு அணிந்திருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

வெளியிட்டுள்ள சி.சி.டி.வி. படங்களுக்கமைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டால் உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டு கொண்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers