இங்கு செல்ல வேண்டாம்: பிரித்தானியா மக்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானியா மக்கள் மடகாஸ்கருக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தீவு மடகாஸ்கர் ஆகும், இங்கு பிளேக் நோய் பரவி வருகிறது.

இந்நோயினால் இதுவரை 80 பேர் இறந்துள்ளதாகவும், சுமார் 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் சுற்றுலாத்தீவான மடகாஸ்கருக்கு செல்வதை தவிருங்கள் என பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிளேக் நோயானது மடகாஸ்கரின் அனைத்து பகுதிகளையும் தாக்கியுள்ளது என மடகாஸ்கரின் சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

GETTY - CONTRIBUTOR

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...