கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவமனை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் கர்ப்பிணி பெண் ஒருவரை பிரித்தானியர் என்பதை உறுதி செய்யக் கேட்டு மருத்துவமனை ஒன்று சிகிச்சை அளிக்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள Addenbrooke பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக முன்பதிவு செய்த Emma Szewczak-Harris என்பவருக்கு குறித்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இவரது பெயர் போலந்து நாட்டவர்கள் போன்று இருப்பதாக கூறி சிகிச்சைக்கான முன்பதிவை ரத்து செய்துள்ளதாகவும், பிரித்தானியர் என்பதை உறுதி செய்தால் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் எனவும் குறித்த மருத்துவமனையானது கடிதம் எழுதியுள்ளது.

மருத்துவமனையின் இந்த மனிதாபிமானமற்ற செயலானது 8 மாத கர்ப்பிணியான தம்மை இரண்டாம்தர குடிமகளாக எண்ண வைத்துள்ளது எனவும் அவர் கவலை பொங்க தெரிவித்துள்ளார்.

இது தமக்கு நேர்ந்த அவமரியாதை எனக் கூறும் அவர், தேவையான ஆவணங்களை தரவில்லை என மருத்துவமனை தெரிவித்துள்ளதற்கு, ஆவணங்களை இணைக்க வேண்டும் என குறித்த மருத்துவமனை கோரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போலந்து நட்டவரை திருமணம் செய்துள்ள எம்மா, கர்ப்பிணியாக இருக்கும் தாம் பல முறை மருத்துவமனை செல்ல வேண்டி இருப்பதாகவும், ஆனால் இதுவரை எவரும் ஆவணங்கள் கேட்டு இம்சித்ததில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

26 ஆண்டுகளாக பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் தமக்கு இதுவரை இதுபோன்ற ஒரு சிக்கல் எழுந்ததில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers