பக்கிங்காம் அரண்மனையை நிரந்தரமாக கைவிடுகிறதா அரசகுடும்பம்?

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் அமைந்திருக்கும் பக்கிங்காம் அரண்மனையிலிருந்து அரச குடும்பம் நிரந்தரமாக வெளியேறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் லண்டலில் வரலாற்று சிறப்புமிக்க பக்கிங்காம் அரண்மனை அமைந்துள்ளது.

இங்கு தான் மகாராணி இரண்டாம் எலிசபெத் வசித்து வருகிறார். இந்நிலையில், மகாராணி உட்பட அரச குடும்பத்தினர் பக்கிங்காம் அரண்மனையை விரைவில் நிரந்தரமாக கைவிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, முன்பெல்லாம் பக்கிங்காம் அரண்மையில் அதிக நேரம் செலவிடும் மகாராணி தற்போது வின்ட்சரில் உள்ள அரண்மனையில் தான் அதிகமாக வசிக்கிறார்.

அதே போல மகாராணியின் மகன் இளவரசர் சார்லஸ் தற்போது மனைவி கமீலாவுடன் லண்டனில் உள்ள கிளாரன்ஸ் வீட்டில் வசித்து வருகிறார்.

வருங்காலத்தில் சார்லஸ் பிரித்தானிய அரசராக பொறுப்பேற்றாலும் பக்கிங்காம் அரண்மனையில் வசிக்க மாட்டாராம்.

காரணம், குறித்த அரண்மனை மிக பெரிதாகவும், நவீன குடும்ப வாழ்க்கைக்கு விலை உயர்ந்ததாகவும் இருப்பதாக சார்லஸ் கருதுகிறார்.

மேலும், தற்போது வசிக்கும் வீடு தான் தனக்கு மிக வசதியாக உள்ளதாகவும் சார்லஸ் நினைப்பதாக தெரிகிறது.

இளவரசர் வில்லியமும் தான் வசிக்கும் கென்சிங்டன் அரண்மனை வீடே தனக்கு வசதியாக இருப்பதாக நினைப்பதால் அவரும் பக்கிங்காம் அரண்மனையில் வசிப்பதை விரும்ப மாட்டார் என கூறப்படுகிறது.

அதாவது பக்கிங்காம் அரண்மனை வருங்காலத்தில் பொதுமக்கள் சுற்றி பார்க்கும் சுற்றுலா தளமாக மாறுவதற்கு கூட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்