பிரித்தானியாவின் பிரதான உளவு மையத்தில் இன்று நடந்தது என்ன?

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா
பிரித்தானியாவின் பிரதான உளவு மையத்தில் இன்று நடந்தது என்ன?

பிரித்தானியாவின் குளுசெஸ்ரெசெயார் பகுதியில் பிரதான நீர்வினியோக குழாயில் பெரும்கசிவு இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக பிரித்தானியாவின் பிரதான உளவு மையத்தின் நடவடிக்கையில் இன்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

GCHQ என்ற குறியீட்டுபெயருக்குரிய அரச தொடர்பாடல் தலைமையகமான பிரதான உளவு மையத்தில் 5 600க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இது அமைந்துள்ள இடத்துக்கு அருகே சுமார் ஏழாயிரம் வதிவிடங்களும் 17 பாடசாலைகளும் உள்ளன.

இந்த நிலையில் இன்று இந்தப்பகுதிக்கு வழங்கப்படும் பிரதான நீர்வினியோக குழாயில் கசிவு ஏற்பட்டதால் உளவு மையத்தின் நடவடிக்கைகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

எனினும் இந்த நீர்க்கசிவு திருத்தப்பட்டு எப்போது நிலைமை வழமைக்குத்திரும்பும் என்பது தொடர்பாக இதுவரை உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்