98 பவுண்ட் கட்டணத்தில் 3 நாடுகளை சுற்றி வந்த பிரித்தானிய இளைஞர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய இளைஞர் ஒருவர் வெறும் 98 பவுண்ட் கட்டணத்தில் 3 நாடுகளின் முக்கிய நகரங்களை சுற்றி வந்துள்ளார்.

லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் கல்லூரியில் படித்துவரும் William Stein என்ற மாணவன் ஒருவார காலத்தில் 3 நாடுகளில் அமைந்துள்ள 4 முக்கிய நகரங்களில் சென்று வந்துள்ளார்.

வெறும் 97.76 பவுண்ட் கட்டணத்தில் பெர்லின், போலந்து, Szczecin உள்ளிட்ட நகரங்களை பார்வையிட்டு திரும்பியுள்ளார்.

20 வயதான Stein வார இறுதி நாட்களை கழிக்கும் பொருட்டு அருகாமையில் உள்ள இரு தலைநகரங்களை பார்வையிட்டு திரும்ப திட்டமிட்டுள்ளார்.

ஆனால் அதற்கு மிக மலிவான கட்டணமாக குறித்த இணையத்தள சேவையானது 80 பவுண்ட் என பரிந்துரைத்துள்ளது.

ஆனால் பொருளாதார மாணவரான Stein மேலும் முயற்சித்ததில் ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் இருந்து போலந்தின் Szczecin நகருக்கு செல்ல விமானத்தில் வெறும் 21.95 பவுண்ட் கட்டணம் மட்டுமே என தெரியவந்தது.

ஆனால் குறித்த விமான சேவையானது ரத்தாகவே இழப்பீடாக கிட்டிய 40 பவுண்ட் தொகையில் பெர்லினில் இருந்து கிளாஸ்கோ வரையான பயணத்தை முன்பதிவு செய்துள்ளார்.

£10 கட்டணத்தில் Szczecin நகரில் தங்கிய ஸ்டெயின் அங்கிருந்து ஜேர்மனிக்கு £7 கட்டணத்தில் பேருந்து பயணம் மேற்கொண்டுள்ளார்.

£12 கட்டணத்தில் கிளாஸ்கோ நகர் வந்து சேர்ந்த ஸ்டெயின் £8.80 கட்டணத்தில் எடின்பர்க் சென்று சேர்ந்துள்ளார். அங்கிருந்து £45.50 கட்டணத்தில் லண்டன் சென்று சேர்ந்துள்ளதாக ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

ஒரே ஒரு நகர் மட்டும் சென்று திரும்ப வேண்டிய கட்டணத்தில் 4 நகரங்கள் சென்று திரும்பியது தம்மால் நம்ப முடியவில்லை எனவும் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...