மீண்டும் Brexit வாக்கெடுப்பு: எச்சரிக்கிறார் Lord Hague

Report Print Fathima Fathima in பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பாக மீண்டும் வாக்கெடுப்பு நடத்துவது பிரிவினையை உண்டாக்கும் என முன்னாள் வெளிவிவகாரத்துறை செயலாளர் Lord Hague தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், பிரித்தானியா அரசியல் வரலாற்றில் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிரிவினைவாதத்தை இது உண்டாக்கும், வெறுப்புகள் நிறைந்திருக்கும்.

2016ம் ஆண்டு மக்கள் செய்தது தவறு என்பதை சுட்டிக் காட்டுவது போன்றது, மற்றொரு வாக்கெடுப்பு நடந்தாலும் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற வாக்களிப்பேன்.

ஒரு வட்டத்துக்குள் சுற்றிக் கொண்டிருக்க இயலாது, முடிவெடுத்தாக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனை விட்டு ஒப்பந்தம் இல்லாமல் விலகுவது நல்லதல்ல எனவும் எச்சரித்துள்ளார்.

Brexit ஒப்பந்தம் தொடர்பாக பிரித்தானியா நாடாளுமன்றத்தில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரித்தானியா விலகுவது தாமதமாகும் என கருதப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...