Brexit ஒப்பந்தம் ஐரோப்பிய யூனியனுக்கு சாதகமாக இருக்கலாம்

Report Print Fathima Fathima in பிரித்தானியா

Brexit ஒப்பந்தம் ஐரோப்பிய யூனியனுக்கு சாதகமாக இருக்கலாம் என பிரித்தானியாவின் பிரெக்சிற்கான பொறுப்பான அமைச்சர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா அதிகாரப்பூர்வமாக விலகுவதற்கான ஒப்பந்தங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நிதி மற்றும் மற்ற விடயங்களில் பிரித்தானியாவை விட ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவாக அமையும் என டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் இரு தரப்புக்கும் முக்கியமானதாகவும், சாதகமானதாகவும் இருக்கும் வகையில் தயார் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஐரோப்பிய யூனியனுக்கு பில்லியன் கணக்கான பவுண்ட்ஸ்களை வழங்க பிரதமர் தெரேசா மே ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து பேச்சுவார்த்தையில் எங்கும் இடம்பெறவில்லை என்றே தெரிகிறது.

இந்நிலையில் பிரெக்சிற் பேச்சுவார்த்தையை துரிதப்படுத்த தயார் என ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான பேச்சாளர் மைக்கேல் பார்னியார் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...