பிரித்தானியாவில் மாயமான வெளிநாட்டவர்கள்!

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக குடியிருக்கும் ஆயிரக்கணக்கானோர் உள்விவகாரத்துறை அலுவலகத்தில் தகவல் தெரிவிக்காததை அடுத்து மாயமானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விவகாரம் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், பிரித்தானியாவில் சட்டவிரோதமாக குடியிருக்கும் சுமார் 140,000 மக்கள் வெளியேற்றப்படும் நிலையில் உள்ளனர்.

இதில் 80,000 மக்கள் பிரித்தானிய உள்விவகாரத்துறை அலுவலகங்கள் அல்லது காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தொடர்ந்து தங்கள் குறித்த தகவல்களை தெரியப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் இதில் பெரும்பாலானோர் தங்கள் தகவலை தெரிவிக்காத நிலையில் 60,000 பேர் குறித்த எந்த தகவலும் சமீப காலமாக இல்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதில் பெருவாரியான மக்கள் பிரித்தானியா விட்டு வெளியேறியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் சட்டவிரோதமாக குடியிருக்கும் மக்களில் சுமார் 9 சதவிகித மக்கள் எந்த அரசு அலுவலகங்களிலும் தங்கள் தகவல்களை பதியவில்லை எனக் கூறப்படுகிறது. இது மொத்தமாக சுமார் 7000 எண்ணிக்கை என தெரிய வந்துள்ளது.

இதனால் அரசு அலுவலகங்களில் இதுவரை தங்கள் தகவல்களை பதியாத மக்களை மாயமானவர்கள் பட்டியலில் இணைத்துள்ளதாக பிரித்தானிய உள்விவகாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்