தூக்கத்தில் இருந்த தந்தையின் மொபைலை பயன்படுத்தி பள்ளிமாணவி செய்த செயல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
308Shares

பிரித்தானியாவில் தூக்கத்தில் இருந்த தந்தையின் மொபைலை பயன்படுத்தி 9 வயது சிறுமி பாரிஸ் நகருக்கு டிக்கெட் முன்பதிவு செய்த சம்பவம் நடந்துள்ளது.

பிரித்தானியாவின் Skegness பகுதியில் குடியிருந்து வரும் Ian Wilson(53) என்பவரது 9 வயது சிறுமியே ஹொட்டல் அறை உள்ளிட்ட பாரிஸ் பயணத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்.

சம்பவம் நடந்த 3 நாட்களுக்கு பின்னர் வில்சனின் பேபால் கணக்கில் இருந்து 1000 பவுண்ட் தொகைக்கும் அதிகமாக நீக்கப்பட்டுள்ளது தெரிய வந்ததை அடுத்தே அவர் நடந்தவற்றை விசாரித்துள்ளார்.

இதில் தமது மகள் தாம் செய்வது என்ன என்பதை அறியாமலே செய்துள்ளதை புரிந்து கொண்ட வில்சன் உடனடியாக தொடர்புடைய நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

வில்சனின் விளக்கம் ஒப்புக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளதால நல்லெண்ண அடிப்படையில் மொத்த தொகையையும் திருப்பி வழங்கியுள்ளனர்.

9 வயதான சூசன், தமது தந்தையின் மொபைல் போனை பயன்படுத்தி விமான கட்டணம் மற்றும் ஹொட்டல் வாடகை என 400 பவுண்ட் செலவு செய்துள்ளார்.

மட்டுமின்றி 215 பவுண்ட் கட்டணத்தில் ஈபிள் கோபுரம் பார்வையிடவும் முன்பதிவு செய்துள்ளார்.

ஜேர்மனியின் தனியார் இணைய நிறுவனம் ஒன்றின் வழியாகவே சூசன் இந்த முன்பதிவுகளை மேற்கொண்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்